இவ்ளோ சம்பாதிச்சும் செந்தில் அதுல வீக்கா? மனைவி சொன்ன சீக்ரெட்.. அட கடவுளே

Published on: June 7, 2024
senthil
---Advertisement---

Actor Senthil:தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 800 படங்களுக்கு மேல் நடித்து தன்னுடைய தனித்துவமான நகைச்சுவையால் இன்று வரை மக்கள் மத்தியில் ஒரு நிலையான இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் செந்தில். இவர் கவுண்டமணியுடன் சேர்ந்து ஏராளமான படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களை ரசிக்க வைத்தனர். இருவரில் யார் திறமையானவர் என யாராலுமே சொல்ல முடியாது.

யாரால் யாருக்கு புகழ் கிடைத்தது என்பதையும் சொல்ல முடியாது. ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் கிடையாது. கவுண்டமணியால் செந்திலுக்கு பெருமை. செந்திலால் கவுண்டமணிக்கு பெருமை என்றுதான் சொல்ல முடியும். அந்த அளவுக்கு இருவரும் இந்த அளவு இன்றுவரை மக்கள் மத்தியில் நிலைத்து இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் இருவருக்குள்ளும் இருந்த புரிதல்தான்.

இதையும் படிங்க: சான்சே இல்ல!.. விஜய் ஆண்டனி இன்னொரு விஜயகாந்த்!. பிரபல தயாரிப்பாளர் நெகிழ்ச்சி…

இந்த நிலையில் சமீபத்தில் செந்தில் தனது குடும்பத்துடன் ஒரு தனியார் youtube சேனலுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது அவருடைய மனைவியை பெண்பார்க்கும் போது நிகழ்ந்த சம்பவங்களை கூறினார் செந்தில். அப்போது அவர்கள் ஊரில் பெண்பார்க்கும் படலம் என்பது இவர்கள் காலத்தில் இருந்து தான் ஆரம்பமானதாம்.

அதற்கு முன்னால் வரை சொந்தத்திலேயே திருமணம் முடித்து வைப்பார்களாம். அதனால் பெண்பார்க்கும் படலம் என்பது எங்கள் திருமணத்திலிருந்து தான் ஆரம்பமானது என கூறினார். அது மட்டும் அல்லாமல் இன்று கோடிக்கணக்கில் சம்பாதித்து வைத்திருக்கும் செந்தில் பண விஷயத்தில் மிகவும் வீக்கானவராம். பணத்தை எண்ண கூட தெரியாதாம்.

இதையும் படிங்க: சத்யராஜ் சம்பளமே வாங்காம நடிச்ச படம இதுதானாம்… ஆனா அவரு அப்படி சொல்லலையே..!

sent

எல்லாவற்றையும் அவருடைய மனைவிதான் கவனித்து வருகிறாராம். அதனால் திருமணம் முடிந்ததும் செந்திலின் அப்பா செந்தில் மனைவியிடம்  ‘அவன் பண விஷயத்தில் ரொம்ப வீக்கா இருப்பான்.அதனால் அதை நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என சொல்லி அனுப்பினாராம். அதிலிருந்து சம்பளம் மற்றபடி வரும் பணங்களை எல்லாம் அவர் மனைவிதான் இன்று வரை கவனித்து வருகிறாராம் .ஆனால் யாருக்காவது உதவி செய்ய வேண்டும். நலிந்த கலைஞர்களுக்கு ஏதாவது பொருள் உதவி செய்ய வேண்டும் என்றால் மட்டும் வருகிற சம்பளத்தில் பாதியை வைத்துக்கொண்டு மீறி பாதியை தான் தன் மனைவியிடம் வந்து கொடுப்பாராம் செந்தில்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.