More
Categories: Cinema History Cinema News latest news

மதுரைக்காரங்கறதால தான் எனக்கு சினிமா வாய்ப்பே கிடைச்சது…சொல்கிறார் ஷாம்

தமிழ்த்திரையுலகில் ஷாம் ஒரு மென்மையான ஹீரோ…இவர் நடித்த படங்களில் இயற்கை, லேசா லேசா படங்களை இன்று வரை யாராலும் மறக்க முடியாது…காதல் வந்தால் சொல்லி அனுப்பு என்ற பாடலுக்கு உயிர் கொடுத்து இருப்பார்…அவ்வளவு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் ஷாம்..இவரது இனிமையான அனுபவங்களை அவரே சொல்கிறார் பாருங்கள்.

என் வைப் வந்து பஞ்சாபி சிந்து. பேரு காமினா. நான் காலேஜ்ல படிக்கும்போது சும்மா ப்ரண்ட்ஸாத் தான் இருந்தோம். என் படிப்புக்கு உதவுனாங்க. நான் முதன்முதலா வந்து ஆக்டர் ஆகணும்னு சொன்னதே அவங்க கிட்ட தான். அப்புறம் நாங்க காதலிச்சோம். தொடர்ந்து நடிகரானேன்.

Advertising
Advertising

அப்போ சொன்னா…நான் ஏற்கனவே சொன்னன்ல நீ ஆக்டராயிடுவன்னு…2002ல படம் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. 2003ல கல்யாணம். நிறைய கேர்ள்ஸ்லாம் மெசேஜ் போட்டாங்க. ஏன் இவ்ளோ சீக்கிரத்துல கல்யாணம் பண்ணுனீங்க…ன்னாங்க.. எனக்கு ஒரு லைப் இருக்கு…நான் கல்யாணம் பண்ண விரும்பறேன்னு சொல்லிட்டேன்…எனக்கு 2 பெண் குழந்தைங்க.

ஒண்ணு சமைரா…அண்டு ஸ்கியாரா…அவங்களோட எல்லா விருப்பத்தையும் நான் ஏத்துக்குவேன்..ஆனா ஒரு கட்டத்துக்கு மேல இது பண்ணா உங்களுக்கு ஆபத்துங்கறதையும் சுட்டிக் காட்டுவேன்..அந்த விதத்தில நான் கொஞ்சம் கண்டிப்பான அப்பா தான். கேர்ள்ஸ்ங்கறதால கொஞ்சம் கூடுதலா கவனம் செலுத்துவேன்..இது ஒரு போட்டி நிறைந்த உலகம். நான் அவங்களோட பெர்சனாலிட்டி மற்றும் கல்வியில் அதிக அக்கறையைக் காட்டுவேன்.

கிட்ஸ் சென்டில்ங்கற ஸ்கூல்லத் தான் படிக்கிறாங்க. தலையை அங்கத் தான் சந்திக்கிற வாய்ப்பு கிடைக்கும். அஜித்சாரோட மகள் அங்க தான் படிக்கிறாங்க. அங்க அவரோட பொண்ண ட்ராப் பண்ண வருவாரு. கல்சுரல் புரோக்ராம், ஆண்டுவிழா நடக்கும்போது எல்லாம் அங்க நான் போயிருவேன். அங்க மட்டும் தான் அஜித்சார பார்க்க முடியும்….அப்போ கேட்பாரு…பிட் ஆ இருக்க…நல்ல பண்ணிக்கிட்டு இருக்கியான்னு கேட்பாரு…ஜாலியா பேசுவாரு…

வாழ்க்கையில் ஒரு பயணம் தான் சக்சஸ். நான் 12 பி படத்துல நடிக்கும்போது ரசிகர்கள் ரொம்ப வரவேற்றாங்க. அது ஒரு பர்சன்டேஜ் ஆப் சக்சஸ். தோல்வி அடைந்தா முடிஞ்சு போச்சுன்னுலாம் கிடையாது. இது ஒரு இன்னொரு முகம். நான் பெரிய பரவலான ஒரு அனுபவத்துக்குள் நுழைந்தேன்.

இயற்கை, வசந்த் சார், ஜீவா சார், ஏவிஎம் இப்படி இருந்தது. அப்புறம் தோல்வி வந்தது. அதனால நான் உடைஞ்சு போகல. நான் எங்க இருந்து வர்றேன்னு கொஞ்சம் யோசிச்சுப் பார்ப்பேன். அதனால எனக்கு மன அழுத்தம் எல்லாம் வந்ததே கிடையாது. சினிமாவுக்குள்ள வந்ததே பெரிய விஷயம். அதனால நான் எப்பவுமே பாசிட்டிவா நினைப்பேன்.

சக்சஸ்ங்கறது என்ட் ஆப் த டேன்னு ஒரு நாள் வரும். அப்போ நம்மால எதுவும் செய்ய முடியலங்கற நிலைமை வரும். இந்த நிலைமை எல்லாருக்கும் வரும். அப்போது இதுக்கு முன்னாடி எது செய்தோமோ அது தான் சக்சஸ். அந்த நாள் இப்போ எனக்கு வரல. அதனால நான் இப்போ ரொம்ப சக்சஸான வாழ்க்கை தான் வாழ்ந்து கிட்டு இருக்கேன்.

Iyarkai Movie

பி பாசிட்டிவ் எவரிதிங் பி குட்…னு சிம்பிளா வாழ்க்கையோட தத்துவத்தை சொல்லிட்டாரு…ஷாம். தொடர்ந்து அவர் சொல்றதைக் கேளுங்க…

இந்த உலகத்துல பவர்புல்லான எமோஷன் எதுன்னு கேட்டா அது காதல் தான்…இது இல்லாம இந்த உலகம் இயங்காது. அதனால தான் என் முதல் 5 படங்கள் லவ் சப்ஜெக்ட். ஆனால் நான் தாமதமாக தான் தெரிஞ்சுக்கிட்டேன்…தமிழ்சினிமாவுல லவ் பண்ற ஹீரோலாம் இண்டஸ்ட்ரிய விட்டு வெளியே போறது ரொம்ப கஷ்டம்.

ஜீவா சார் ஒரு நம்பர் கொடுத்து அங்க நடிகர் தேவைப்படுதுன்னு சொன்னாரு…விக்ரம்சார், அஜீத்சார் எல்லாம் கொஞ்சம் தள்ளிப்பண்ணலாம் னு அந்தப்படத்தைக் கைவிட்டாங்க. என்னை நடிக்கத் தெரியுமான்னு யாரும் கேட்கல. நான் வந்து மதுரை. மதுரைன்னான்னு கேட்டாங்க…நான் மதுரைக்காரன் சார். நான் படிச்சதெல்லாம் பேங்களூர். அப்போ நான் இங்கிலீஷ்ல சொன்னேன். இப்போ நீ சொன்னதெல்லாம் தமிழ்ல சொல்லுன்னாங்க.

சார் இங்க நான் ஸ்கூல் படிச்சேன் சார். காலேஜ் படிச்சிட்டு மாடலிங் பண்ணுனேன் சார். இப்ளோ ஆட்ஸ் பண்ணிருக்கேன் சார். ஒரு சந்தர்ப்பம் கொடுத்தீங்கன்னா நான் நல்லா பண்ணுவேன்னு சொன்னேன். உடனே பைல்ல குளோஸ் பண்ணிட்டு யு ஆர் எ ஹீரோன்னு சொன்னாங்க. மதுரைங்கற ஒரு வார்த்தையால தான் நான் ஹீரோ…! முதல் படத்திலயே ஜோதிகா, சிம்ரன்னு ரெண்டு ஹீரோயின். முதல்ல நான் எங்கம்மாகிட்ட சொல்றேன். நம்பல. ப்ரண்ட்ஸ்கிட்ட சொல்றேன்…நம்பல…

Actor Sham

அடுத்ததா நான் படப்பிடிப்பு முடிச்சதும்…போட்டோவோட போய் தான் அவங்க கிட்ட காட்டினேன். அப்புறம் தான் நம்புனாங்க…எனக்கு கதையே யாரும் சொல்லல. நீ தான் ஹீரோ வா வந்து நடின்னு சொன்னாங்க. அப்புறம் படம் பார்க்கும்போது தான் தெரியுது. கதை இப்படி போகுதுன்னு…!

நானே 12 பி ரிலீஸாகி 14 ஷோ கண்டினியுஸா பார்த்தேன். அப்போ தியேட்டர்ல என்னப் பார்க்கற ரசிகர்கள் ஏ…ஹீரோவே வந்துருக்காருப்பா…நீயாவது கதையை சொல்லுன்னு கேட்பாங்க. டேய்;…எனக்கே புரியலப்பா…நானே இப்போ தான் படம் பார்க்கிறேன்னு சொல்வேன்…

2001ல் வெளியான 12 பி படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப்படத்தோட கதை எழுதியவர் பாக்யராஜ். இயக்கியவர் ஜீவா என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
sankaran v

Recent Posts