அடையாளமே தெரியாமல் ஆளே மாறிய விஜயகாந்த் மகன்!.. செம மாஸ் அப்டேட் இருக்கு!..
திரையுலகில் முன்னணி நடிகராக பல வருடங்கள் கலக்கியவர் விஜயகாந்த். இவரை புரட்சி கலைஞர் என ரசிகர்கள் அழைத்தனர். மதுரையிலிருந்து சென்னை வந்து சினிமா வாய்ப்பு தேடி அலைந்து பல இடங்களில் அவமானப்பட்டு சினிமாவில் படிப்படியாக முன்னேறியவர்.
ஆக்ஷன் படங்களே தனக்கே செட் ஆகும் என கணக்குப்போட்டு அந்த ரூட்டில் சென்று பல வெற்றிப்படங்களை கொடுத்தார். உழவன் மகன், செந்தூரப்பூவே, புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் என அசத்தலான படங்களை கொடுத்தார். தற்போது உடல்நலம் குன்றி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் இதில் மூத்தவ சண்முக பாண்டியன். இவருக்கும் சினிமாவில் நடிக்கும் ஆசை ஏற்பட ‘சகாப்தம்’ என்கிற படத்தில் அறிமுகமானார். அந்த படம் ஓடவில்லை. அதன்பின் இதுவரை அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.
இந்நிலையில், தற்போது ஒரு புதிய படத்திற்காக தன்னுடைய தோற்றத்தை முழுவதுமாக மாற்றியிருக்கிறாரம். அவரை யார் பார்த்தாலும் அடையாளமே கண்டுபிடிக்கமுடியவில்லையாம். தற்போது ரேக்ளா என்கிற படத்தை இயக்குனர் அடுத்து ஒரு பக்கா ஆக்ஷன் படம் ஒன்றை எடுக்கவுள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளா, தாய்லாந்து ஆகியவற்றில் காட்டுப்பகுதிகளில் எடுக்கவுள்ளனராம்.
அதற்காகத்தான் சண்முக பாண்டியன் தனது உருவத்தையே மொத்தமாக மாற்றியிருக்கிறாராம். விரைவில் இப்படம் தொடர்பான செய்திகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இயக்குனர் மற்றும் நடிகர் சசிக்குமார் இயக்கவுள்ள குற்றப்பரம்பரை வெப் சீரியஸிலும் அடுத்து சண்முகம்பாண்டியன் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.