Connect with us
sharuk

Cinema News

ஷாரூக்கான் திடீரென மருத்துவமனையில் அனுமதி.. உடம்பில் இப்படி ஒரு பிரச்சினையா?

Actor Sharukhan: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இந்திய அளவில் ஒரு பெரிய பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். ஹிந்தி மட்டுமல்லாமல் தமிழிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதையும் மறந்து ரசிகர்களிடம் கீழ் இறங்கி மிகத்தன்மையாக பேசக்கூடியவர் ஷாருக்கான். தமிழ் நடிகர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது ஷாருக்கான் மிகவும் எளிமையானவர்.

சென்னைக்கு எந்த ஒரு விழாவிற்கு வந்தாலும் மேடையில் ஆடுவதும் ரசிகர்களுடன் காமெடியாக பேசுவதும் மாதிரி ஏராளமான விஷயங்களில் தன்னை ஈடுபடுத்தி கொள்வதன் மூலம் ரசிகர்களை எளிதாக கவர்ந்து விடுவார் ஷாருக்கான். 60 வயதை நெருங்கி இருந்தாலும் இன்னும் அவருடைய அந்த இளமையான தோற்றத்தால் இன்றுவரை ரசிகர்களை உற்சாகப்படுத்திக் கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: கரகாட்டக்காரன் எந்த படத்தின் சாயல் தெரியுமா? அடடா… இவ்ளோ விஷயங்கள் ஒத்துப்போகுதா?

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆயிரம் கோடி வசூலை பெற்று பாலிவுட்டில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் ஷாருக்கான். இந்த நிலையில் இன்று ஷாருக்கான் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஒரு செய்தி வைரலாகி வருகின்றது.

விசாரித்து பார்க்கும் பொழுது அவருக்கு வெப்பவாதம் என்றும்  அதன் காரணமாகவே அவர் அகமதாபாத்தில்  உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இன்னும் சில நேரங்களில் அது பற்றிய கூடுதல் தகவல் என்ன என்பது தெரியவரும். வெப்பவாதம் என்பது நீர் சத்து குறைந்து உடலில் சிறு நீரகத்திற்கு செல்லவேண்டிய  நீரின் அளவு குறைந்து சிறு நீரகத்தில் முதலில் பாதிப்பு ஏற்படும் என்பதாகும்.

இதையும் படிங்க: பால்ல செஞ்ச கொழுக்கட்ட மாதிரி இருக்க!.. பளிச் அழகில் தூக்கத்தை கெடுக்கும் நிகிலா விமல்…

இவருடைய இந்த செய்தி அறிந்து பாலிவுட் முழுவதும் சோகத்தில் இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களும் அவர் சீக்கிரம் குணமடைந்து வீட்டுக்கு வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டும் இருக்கிறார்கள். திடீரென இந்த செய்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top