தந்தை எட்டடி பாய்ந்து விட்டார்...குட்டி பதினாறு அடி பாயுமா?!
நடிகர்களில் புரட்சி கலைஞர் என்று பெயர் எடுத்தவர் விஜயகாந்த். இவரது படங்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் சரிவை சந்தித்தன. காலம் போன போக்கில் அவரை கையோடு வாரி அணைத்துக் கொண்டனர் ரசிகர்கள்.
கறுப்பு எம்ஜிஆர் என்று புகழாரம் சூட்டும் அளவிற்கு உயர்ந்தார் தனது தனித்துவத்தால். சில ஆண்டுகளாகவே ஓய்வில் இருந்தார். தற்போது அமெரிக்கா சென்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். இப்போது பார்க்கும் போது ஸ்லிம்மாக உள்ளார் விஜயகாந்த்.
இன்று வரை அவருக்கு என்று ஒரு தனி அந்தஸ்து இருக்கவே செய்கிறது. தற்போதைய சூழலில் அரசியலில் அவரது மனைவி பிரேமலதா தான் அனைத்தையும் கவனித்து வருகிறார். விஜயகாந்த் முன்பு அவரது மகனும் நடிக்கத் துவங்கி விட்டார்.
1992 ஏப்ரல் 6ம் நாள் சண்முகப்பாண்டியன் மதுரையில் பிறந்தார்.
முதல் படம் சகாப்தம். வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை. இந்தப்படம் 2015ல் வெளியானது. தொடர்ந்து வந்த மதுர வீரன் படம் சண்முகப்பாண்டியனுக்கு நல்லா நடிக்க வரும்போல என நிரூபித்தது. கிராமத்து இளைஞனாகவே வாழ்ந்த படம் இது.
தொடர்ந்து தனது தந்தையுடன் இணைந்து நடித்து தமிழன் என்று சொல் என்ற படம் வர உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் ஏதோ சில காரணங்களால் படம் வரவில்லை. புதுபடமாக வரஉள்ள மித்ரனில் தந்தையைப் போல போலீஸ் அதிகாரியாக வந்து மிரட்டி உள்ளார்.
நடிகைகள் போல இவரும் இன்ஸ்டாகிராமில் தன் பங்கிற்கு போஸ் கொடுத்துள்ளார்.
தற்போது சசிக்குமாரின் இயக்கத்தில் படம் நடிக்க உள்ளார். அவரும் நீண்டகாலமாக படத்தில் நடித்து வருவதால் படத்தை இயக்க முடியவில்லை என்றார். தற்போது தான் அதற்கான சூழல் உருவாகியுள்ளது.
குற்றப்பரம்பரை நாவலை தழுவி உருவாக உள்ள வெப்சீரிஸ் தான் இது.
விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நடிக்க உள்ளார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தான் இந்த தொடரைத் தயாரிக்கிறார்.
அது சரி...தந்தை எட்டடி பாய்ந்து ஓய்ந்து விட்டார். குட்டி பதினாறு அடி பாயுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.