Categories: Cinema News latest news

ஹீரோவா நடிச்சாலும் இவர் இருந்தா நடிக்க மாட்டேன்! மூத்த நடிகரிடம் எதிர்ப்பை காட்டும் சித்தார்த்

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகர் என்றாலும் இன்னும் அந்த நடிகர் என்ற அந்தஸ்தை பெற முயற்சித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் சித்தார்த். பாய்ஸ் படத்தின் மூலம் முதன் முதலில் கதாநாயகனாக அறிமுகமானார் சித்தார்த்.

ஆனால் அதற்கு முன் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தில் ஒரு பேருந்தில் செல்லும் பயணியாக நடித்திருப்பார். கதாநாயகனாக அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த புதுமுக நடிகருக்கான விருதை வாங்கினார். தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க : வாயால் வாழ்க்கையை இழந்த விஜய் தேவரகொண்டா.. அடக்கி வாசிக்க வைத்த அந்த சம்பவம்!…

ஆனால் ரசிகர்களை கவரும் அளவுக்கு இவரின் கதாபாத்திரங்கள் அமையவில்லை. நடிப்பு மட்டுமில்லாது சிறந்த பாடகராகவும் கதை எழுத்தாளராகவும் தயாரிப்பாளராகவும் பல படங்களில் பணிபுரிந்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வரும் சித்தார்த்தின் சமீப வெளியான படமான டக்கர் படம் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை. ஆனால் சமூக அக்கறையில் அதிக ஆர்வம் கொண்டவர் சித்தார்த்.

எதையும் துணிச்சலாக சமூக ஊடகங்களில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டவர். அதன் மூலம் பல அரசியல் தலைவர்களின் கோபத்திற்கும் ஆளாகியுள்ளார். இந்த நிலையில் நடிகரும் பிரபல அரசியல் பிரமுகருமான எஸ்.வி.சேகர் சமீபத்தில் ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்தனர்.

இதையும் படிங்க : முதல் வாய்ப்புக்கு தூணாய் இருந்த தயாரிப்பாளர்… இன்றுவரை மறக்காமல் சிவாஜி குடும்பம் செய்யும் நன்றிக்கடன்!….

பத்திரிக்கையாளர்கள் அவரை சூழ்ந்துகொண்டு பேட்டிகள் எடுத்தனர். அதில் ஒரு நிரூபர் எஸ்.வி.சேகரும் சித்தார்த்துக்கும் இடையே நடந்த ஒரு பிரச்சினையை பற்றி கேட்டார். அதாவது ஒரு படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்க அதே படத்தில் எஸ்.வி.சேகரும் நடிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம்.

அப்போது சித்தார்த் அந்தப் படத்தின் தயாரிப்பாளரிடம் இந்த படத்தில் எஸ்.வி.சேகருடன் நடிக்க மாட்டேன் என்று கூறினாராம். ஏனெனில் சித்தார்த் மோடி கட்சியை எதிர்ப்பவராம்.ஆனால் சேகர் மோடி கட்சியை ஆதரிப்பவராம். அதனால் இதன் மூலம் எதாவது சின்ன சின்ன பிரச்சினைகள் வரும் என சித்தார்த் கூறினாராம்.

இதை அப்படியே சேகரிடம் தயாரிப்பாளர் சொல்ல அதற்கு சேகர் ‘  நான் என்ன டையலாக் மூலம் சண்டை போடப் போறேனா ’ என கூறினாராம். மேலும்  நான் மோடி வாழ்க என படத்தில் சொல்லப்போறதும் இல்லை, அவர் மோடி ஒழிக என சொல்ல போறதும் இல்லை என சேகர் கூறினார்.

Published by
Rohini