இந்த படமாவது ஹிட் அடிக்குமா?.. மேடையில் கண் கலங்கிய சித்தார்த்!.. என்ன சொன்னார் தெரியுமா?,,

பாய்ஸ் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்துள்ள சித்தா திரைப்படம் வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள சித்தா திரைப்படம் இந்த வாரம் வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் அந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்டது. அப்போது, மேடையில் பேசிய சித்தார்த் கண்கலங்கியபடி பேசி ரசிகர்களை பதற வைத்துள்ளார்.

இதையும் படிங்க: கர்ண கொடூரமா இருக்கே!.. இதுக்கு கார்ட்டூன் சேனலே பார்க்கலாம் போல.. டீசரே இப்படின்னா?..

ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சித்தார்த் கடந்த 20 ஆண்டுகளாக நடித்த பல திரைப்படங்கள் அவருக்கு பெரிதும் கை கொடுக்கவில்லை. கமர்ஷியல், கன்டென்ட் என மாறி மாறி நடித்தாலும் பெரிதாக எந்தப் படமும் ஓடவில்லை.

கடைசியாக வெளியான டக்கர் படமும் டார்ச்சர் ஆக அமைந்துவிட்டது. இந்நிலையில், சித்தா திரைப்படம் உணர்வுபூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்றும் கண் கலங்கியபடியே சித்தார்த் மேடையில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: இன்னைக்கு நைட்டுக்கு இது போதும்!. ஷிவானி நாராயணனின் நச் கிளிக்ஸ்!..

சித்தப்பா என்பதன் சுருக்கமே ”சித்தா”வாக டைட்டில் ஆகி உள்ளது. சித்தார்த்தின் சுருக்கமாகவும் சித்தா டைட்டில் உள்ளது இயக்குனர் செய்த மேஜிக் என்றே சொல்லலாம்.

மேடையில் பேசும்போது, ஒரு நடிகனாக இதுதான் என் முதல் படம் என்றும் இந்தப் படத்தை முடிந்தவரை மவுத் டாக் மூலம் வெற்றியடைய வையுங்கள் எங்கள் கோரிக்கையும் பத்திரிகையாளர்கள் மத்தியில் சித்தார்த் வைத்துள்ளார்.

இதையும் படிங்க: சொகுசு கார்.. சொந்தமா பண்ணைத் தோட்டம்!.. என்னம்மா வாழுறாருப்பா ஜிபி முத்து!.. புது வீடியோ பார்த்தீங்களா?..

இயக்குனர் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளனர். ஏ ஆர் ரகுமான், ஷங்கர் உள்ளிட்டவர்களுக்கு இந்த வாரமே படத்தை போட்டு காண்பிக்க திட்டமிட்டுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

அண்ணன் இறந்து போன நிலையில், அண்ணி மற்றும் அண்ணனின் குழந்தையுடன் வாழ்ந்து வரும் சித்தார்த்துக்கும் அண்ணன் மகளுக்கும் இடையே ஏற்படும் ஒரு சிக்கலான பிரச்சனையை கண்டுபிடிக்க ஈஸ்வரன் (சித்தார்த்) எந்த அளவுக்கு போராடுகிறார் என்பதே இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2, ஜெயம் ரவி, நயந்தாரா நடித்துள்ள இறைவன் உள்ளிட்ட படங்களுடன் சித்தார்த் தைரியமாக இந்த வாரம் போட்டிப் போட உள்ளார்.

 

Related Articles

Next Story