Cinema News
பிச்சைக்காரன் பட வாய்ப்பை மிஸ் பண்ண நடிகர்!. இப்பவும் ஃபீல் பண்றாராம்!.. வட போச்சே!…
சில சமயம் ஒரு இயக்குனர் ஒரு கதையை உருவாக்கி ஒரு ஹீரோவிடம் சொல்வார். ஆனால், கதை அந்த ஹீரோவுக்கு பிடிக்காமல் போய் ‘நான் நடிக்க மாட்டேன்’ என சொல்ல, வேறு ஹீரோவை வைத்து அந்த இயக்குனர் அந்த கதையை எடுப்பார். இது போல பலமுறை திரையுலகில் நடந்துள்ளது.
அதேபோல், கதை பிடித்திருந்தாலும் ஹீரோ சொல்லும் வரை இயக்குனரால் காத்திருக்க முடியாது. அதுபோன்ற சூழ்நிலையிலும் வேறு ஹீரோவை வைத்து அந்த படம் உருவாகும். சில இயக்குனர்கள் மட்டுமே அந்த ஹீரோவுக்காக காத்திருந்து அந்த கதையை படமா எடுப்பார்.
இதையும் படிங்க: யாரும் ‘தல’னு சொல்லாதீங்க! ஏகேனு சொன்னாலே போதும் – அஜித் சொன்னதுக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்கா?
தமிழில் ‘சொல்லாமலே’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சசி. அதன்பின் ரோஜா கூட்டம், டிஷ்யூம், பூ, ஐந்து ஐந்து ஐந்து உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். விஜய் ஆண்டனியை வைத்து அவர் இயக்கிய படம்தான் பிச்சைக்காரன். விஜய் ஆண்டனியே இப்படத்தை தயாரித்திருந்தார்.
இந்த படம் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றி காரணமாக விஜய் ஆண்டனி முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறி பல படங்களிலும் நடித்தார். அவரே இயக்கிய பிச்சைக்காரன் 2 படமும் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: நான் திறமையான நடிகன்… அதிர்ஷ்டத்தில் ஹீரோவான ரஜினிகாந்த்… ராதாராவி சொல்லும் சூடான சம்பவம்..!
பிச்சைக்காரன் படத்தின் கதையை இயக்குனர் சசி முதலில் நடிகர் சித்தார்த்திடம் சொன்னாராம். ஆனால், அவர் அதில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில், அவர் சொன்ன கதை வேறு. அதன்பின், கதையில் சில மாற்றங்களை செய்து விஜய் ஆண்டனியை வைத்து இயக்கியுள்ளார்.
படத்தை பார்த்த சித்தார்த் இந்த படத்தை மிஸ் செய்து விட்டோமே என வருத்தப்பட்டாராம். அதேநேரம், சசி இயக்கிய சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் சித்தார்த், ஜிவி பிரகாஷுடன் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆர்.ஜே.பாலாஜி சொன்ன கதையில் நடிக்க சம்மதித்த விஜய்!. அட இது எப்படா நடந்துச்சி!…