பாலசந்தர் கூப்பிட்டும் நடிக்க மறுத்த சித்தார்த்! எல்லாத்துக்கும் காரணம் கமல்தானாம்
பாய்ஸ் படத்தின் மூலம் 2003 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார் நடிகர் சித்தார்த். துள்ளலான நடிப்புடனும் துரு துருவென சுப பாவமும் கொண்ட நடிகர் சித்தார்த் இப்போது டக்கர் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இவர் ஒரு திறமையான நடிகர். இவர் நடித்த காவியத்தலைவன் ,சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
ஆனால் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெறுவதற்கு இன்னும் முயற்சி செய்து கொண்டு தான் வருகிறார். பாடுவதில் ஆர்வம் கொண்ட சித்தார்த் ஒரு சில ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். பார்த்தவுடன் பழகும் தன்மை கொண்ட சித்தார்த்தை அனைவரும் விரும்புகின்றனர்.
கமல் என்றால் மூச்சு
சமூகப் பிரச்சினைகளை கையில் எடுத்து அவ்வப்போது சமூக ஊடகங்களின் வாயிலாக தனது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார் சித்தார்த். கமலின் தீவிர ரசிகர் என்று சொல்வதை விட கமலை தனது மானசீக குருவாக பாவித்து வருகிறார். கமலை பற்றி பேசும் போதெல்லாம் எங்க சார் எங்க சார் என்று பலமுறை உச்சரித்து பேசுகிறார் சித்தார்த்.
அந்த அளவுக்கு கமல் மீது அதிக அன்பும் பாசமும் கொண்டவராக இருக்கிறார். இந்தியன் 2 படத்திலும் கமலுடன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சித்தார்த் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒரு சமயம் பாலச்சந்தர் சித்தார்த்தை கூப்பிட்டு "கமலின் ஒரு படத்தை மறுபடியும் ரீமேக் செய்யப் போகிறேன் என்றும் அதில் நீ நடிக்கிறாயா என்று கேட்டதாகவும்" சித்தார்த் ஒரு பேட்டியில் கூறினார்.
அந்தப் படமா?
1976 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான படம் தான் மன்மத லீலை. அந்தப் படத்தின் ரீமேக்கில் தான் சித்தார்த்தை பாலச்சந்தர் நடிக்க சொன்னாராம் .ஆனால் சித்தார்த் முடியவே முடியாது என்று சொல்லி மறுத்துவிட்டாராம். காரணம்" கமலின் எந்த படத்தையும் நான் ரீமேக் செய்ய மாட்டேன் என்றும் உங்கள் படத்தையும் ரீமேக் செய்ய மாட்டேன் என்றும் நீங்கள் இரண்டு பேர் பணியாற்றிய படத்தையும் ரீமேக் செய்ய மாட்டேன்" என்றும் திட்ட வட்டமாக கூறிவிட்டாராம்.
அதாவது யாருமே பண்ண முடியாதது என்று ஒரு சில பேர் இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் எங்கள் கமல் சார். அதனால்தான் அதை நான் ரீமேக் செய்ய மாட்டேன் என்று கூறினாராம் சித்தார்த்.
இதையும் படிங்க : கதையை கேட்டு ஏமாந்திட்டேன்; இப்படியா படம் எடுப்பான்?!.. எல்லோரிடமும் புலம்பிய சிவாஜி