நம்ம பாட்டு..வா..ஆடலாம்..! ஏஆர்.ரகுமான் பாடியதும் திரிஷாவை தேடி ஓடி வந்த இளம் நடிகர்...(வீடியோ)
மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ லாஞ்ச் நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் கமல், ரஜினி போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
படத்திற்கு ஏஆர். ரகுமான் இசையமைக்க டிரெய்லர் வெளியாகி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தில் உள்ள கதைகள் பெரும்பாலானோர் தெரிந்தாலும் கூடவே ஏஆர்.ரகுமான் இசையில் திரையில் பார்க்க போவதை எண்ணி ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அந்த அளவுக்கு படத்திலுள்ள பாடல்கள் ரசிக்கும் படியாக இருக்கின்றது. மேலும் மேடையில் ஏஆர்.ரகுமான் மணிரத்தினம் காம்போவில் அமைந்த படங்களின் பாடல்களை பாடி அசத்தினார். அப்போது ஜனகணமன படத்தில் அமைந்த “யாக்கை விழி காதல் சுடர்” என்ற பாடல் பாடினார்.
அப்போது கீழே அமர்ந்திருந்த திரிஷாவிற்கு பின் இருக்கையில் அமர்ந்த நடிகர் சித்தார்த் திரிஷாவின் பின் பக்கமாக வந்து திரிஷாவுடன் அந்த பாடலுக்கு சேர்ந்து டூயட் பாடி இருவரும் செம ஜாலியாக ஆடி மகிழ்ந்தனர். ஏனெனில் அந்த பாடலுக்கு படத்தில் திரிஷாவும் சித்தார்த்தும் தான் நடித்திருப்பர். அந்த நியாபகத்தில் இருவரும் பார்த்து மகிழ்ந்தனர்.
வைரலான வீடியோ : https://twitter.com/balajidtweets/status/1567416017730605058?s=20&t=KF3D1I1UZPAjqRtekfAsWQ