மருத்துவமனையில் அனுமதி.. நடிகர் சிம்புவுக்கு என்னாச்சு?...

by சிவா |
simbu
X

சர்ச்சைகளில் சிக்கினாலும் அவ்வப்போது ஹிட் படங்களை கொடுப்பவர் நடிகர் சிம்பு. விண்ணை தாண்டி வருவாயா படத்திற்கு பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடித்து வெளியானா மாநாடு படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. எனவே, சிம்புவும், அவரின் ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சிம்பு திடீரென சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வைரல் காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அதேநேரம் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு எதுவுமில்லை எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இதையடுத்து அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story