டைரக்டர்ஸ் 3 தப்பு பண்றாங்க!.. ஆனா மணி சார் மட்டும்!.. சிம்பு ஓப்பன் டாக்!…

by சிவா |   ( Updated:2025-04-22 22:55:55  )
simbu
X

அப்பா டி.ராஜேந்தரால் சின்ன வயதிலேயே சினிமாவுக்கு வந்தவர் சிம்பு. சின்ன வயதிலேயே ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். காதல் அழிவதில்லை படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். 23 வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். 23 வருட சினிமாவில் இருப்பதால் சிம்பு உச்சம் தொட்டிருக்க வேண்டும். ஆனால், அந்த இடத்தை இன்னமும் சிம்பு அடையவில்லை.

அதற்கு காரணம் நல்ல நடிகராக இருந்தாலும் சிம்பு நல்ல தொழில்முறை நடிகர் கிடையாது. அதாவது, அவரிடம் சின்சியாரிட்டி என்பது இருக்கவே இருக்காது. காலை 7 மணிக்கு ஷூட்டிங் என்றால் 11 மணிக்குதான் வருவார். இதனாலேயே இயக்குனர்களின் அதிருப்திக்கு ஆளானார். அதோடு, சம்பள விஷயத்திலும் மிகவும் கறாராக இருப்பார். அவர் விட்டாலும் அவரின் அப்பா டி.ஆர்.விடமாட்டார்.

தன்னுடைய படம் என்ன வியாபாரம் ஆகுமோ அதை தாண்டி சம்பளம் கேட்பார். படப்பிடிப்பில் எல்லோரும் காத்திருக்கும்போது சிம்பு வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பார். இதனால்தான் சிம்புவை வைத்து படமெடுக்க பல இயக்குனர்கள் தயங்குகிறார்கள். அதனால்தான் சினிமாவில் எல்லா திறமைகளும் இருந்தும் சிம்பு அதற்கான இடத்தை இன்னமும் பிடிக்காமல் இருக்கிறார்.

simbu

எங்கு போனாலும் ‘நீங்கள் ஏன் சரியாக ஷுட்டிங் செல்வதில்லை?’ என்கிற கேள்வி தன்னை தொடர்வதால் ஒருகட்டத்தில் தன்னை மாற்றிக்கொண்டு ஒழுங்காக ஷூட்டிங் போக துவங்கினார். வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார். அதன்பின் நடித்த வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.

பத்து தல படம் வெளியாகி 2 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னமும் சிம்புவின் அடுத்த படம் வெளியாகவில்லை. இப்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் ஜூன் மாதம் 5ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் ‘ஷூட்டிங் தொடர்பாக உங்கள் மீது பல வருடங்களாக உள்ள புகாருக்கு உங்கள் பதில் என்ன?’ என ஒருவர் கேட்டார்.

அதற்கு பதில் சொன்ன சிம்பு ‘பல இயக்குனர்களே ஷூட்டிங்கிற்கு லேட்டாதான் வருகிறார்கள். நான் வந்தால் என்ன தப்பு?… இரண்டாவது, காட்சிகள் எடுக்கும் விஷயத்தில் பல இயக்குனர்களுக்கும் தெளிவே இல்லை. ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு வந்தபின் என்ன காட்சியை எடுப்பது என ஆலோசனை செய்கிறார்கள். இதனால் நான் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அதனால்தான் நான் லேட்டாக வருகிறேன். அதேபோல், மானிட்டரை பார்த்து தூரத்திலிருந்து மைக்கில் இயக்குனர்கள் கத்துகிறார்கள். இதுவும் எனக்கு பிடிக்கவில்லை. ஆனால், இந்த மூன்றுமே மணிரத்னம் சாரிடம் இருக்காது. அதனால்தான் அவரின் படங்களுக்கு நான் சீக்கிரமாகவே போய்விடுகிறேன்’ என சொல்லியிருக்கிறார்.

Next Story