அஜித்தை போலவே துபாயில் வீடு வாங்கும் சிம்பு!.. விலை இவ்ளோ கோடியா?!…

Published on: January 26, 2026
str
---Advertisement---

வெளிநாடுகளில் வீடு வாங்குவது என்பது நடிகர்களுக்கு ஒரு கௌரவமாகவே மாறிவிட்டது. ஏற்கனவே சில திரை பிரபலங்கள் துபாயில் வீடு வாங்குகிறார்கள்.. அதில் நடிகர் அஜித்குமார் துபாயில் இரண்டு வீடுகள் வாங்கியிருக்கிறார். அங்கிருந்துதான் அவர் கார் ரேஸ்களில் கலந்துகொண்டு வருகிறார். ஒருக்கம் நடிகர் சிம்பு கடந்த பல மாதங்களாகவே துபாயில்தான் தங்கியிருக்கிறார். ஆனால் ஹோட்டலில் வாடகை கொடுத்து தங்கியிருக்கிறார்.

ஷூட்டிங்கில் கலந்து கொள்ள மட்டுமே இந்தியா வரும் சிம்பு ஷூட்டிங் முடிந்ததும் உடனே துபாய்க்கு பறந்து விடுகிறார். சமீபத்தில் கூட அரசன் படத்தின் முதல் கட்ட படிப்பு முடிந்தவுடன் அமெரிக்கா போய்விட்டார் சிம்பு.. இந்நிலையில்தான் துபாயில் வீடு வாங்கும் ஆசை சிம்புவுக்கு வந்திருக்கிறது.

அஜித் வீடு வாங்கியிருக்கும் அதே பகுதியில் வீடு ஒன்றை வாங்க சிம்பு முயற்சி செய்திருக்கிறார்.. ஆனால் வீடு கிடைக்கவில்லை.. எனவே அஜித்தின் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் தள்ளி ஒரு புதிய வில்லாவை விலைக்கு வாங்குவதற்கு திட்டமிட்டிருக்கிறார் சிம்பு. அந்த வீட்டின் விலை இந்திய மதிப்பில் சுமார் 57 கோடி என சொல்லப்படுகிறது.

சினிமா பிரபலங்களுக்கு துபாயில் ஏதாவது காரியம் நடக்க வேண்டும் என்றால் அங்கே கண்ணன் ரவி என்கிற தொழிலதிபர் இருக்கிறார். அவர் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். சமீபத்தில் ஜீவாவின் நடிப்பில் வெளியான தலைவர் தம்பி தலைமையில் படத்தையும் இவர்தான் தயாரித்திருந்தார்.

சிம்பு அவரிடம் சென்று உதவி கேட்டிருக்கிறார். துபாயில் வீடு வாங்கவேண்டுமென்றால் மொத்த தொகையில் டவுன் பேமெண்ட் 40 சதவீதம் செலுத்த வேண்டும். அந்த வகையில் சிம்புக்காக 22 கோடியை கண்ணன் ரவி செலுத்தவிருக்கிறாராம். இந்த வருட இறுதியில் சிம்புவுக்கு அந்த வீடு கைக்கு வரும் என சொல்லப்படுகிறது.. அநேகமாக கண்ணன் ரவி தயாரிப்பில் சிம்பு அடுத்த படத்தில் நடிக்கலாம் என சொல்கிறார்கள்.