மீண்டும் வெயிட் போட்டு குண்டான சிம்பு...அட இது எதுக்கு தெரியுமா?.....
2 வருடங்களுக்கு முன் நடிகர் சிம்பு தனது உடல் எடையை அதிகரித்து மிகவும் குண்டாக காணப்பட்டார். அவர் நடிகர் பிரபுவை போல் மாறிவிட்டதாக பலரும் கிண்டலடிக்க துவங்கினார்.
அதன்பின் வெளிநாடுகளுக்கு சென்று கடினமான உடற்பயிற்சிகள் மூலம் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி அழகிய தோற்றத்திற்கு மாறி மாநாடு படத்தில் நடித்தார். அப்படம் சூப்பர் ஹிட் ஆனது. அதேபோல், கவுதம் மேனன் இயக்கத்தில் அவர் நடித்த ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்காக மேலும் உடல் எடை குறைத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
ஆனால், கடந்த சில மாதங்களாக வெளியாகி வரும் சிம்புவின் புகைப்படங்களை பார்த்தால் சிம்பு மீண்டும் குண்டாகிவிட்டது தெரியவந்தது. இது சிம்பு ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ஆனால், இது எல்லாம் ஒரு காரணத்திற்காகத்தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
சிம்பு அடுத்து இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்திற்காகத்தான் மீண்டும் உடல் எடையை ஏற்றி, தாடி வைத்து சிம்பு புதிய தோற்றத்திற்கு மாறியுள்ளார் எனக்கூறப்படுகிறது.