Categories: latest news

சிம்புவின் லைன்அப்!… கேட்கிறப்ப நல்லாத்தான் இருக்கு?!.. ஆனா ஒன்னும் ஒர்க்கவுட் ஆகலயேப்பா!…

நடிகர் சிம்பு அடுத்ததாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகின்றார் என்கின்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பத்து தல. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர் 48 படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருந்தது.

இதையும் படிங்க: எங்க அப்பா ஒரு லெஜண்ட்!… தவறான தகவல் வேதனையளிக்கிறது.. ஏ.ஆர் ரகுமான் மகன் உருக்கம்!…

ஆனால் கடைசி நேரத்தில் இப்படத்தின் பட்ஜெட் காரணமாக கமல்ஹாசன் இப்படத்தை தயாரிக்க முடியாது என்று கூறிவிட்டார். இதற்கிடையில் நடிகர் சிம்பு, மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் கமலஹாசன் உடன் இணைந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து இயக்குனர்களிடம் கதை கேட்டு திரைப்படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகின்றார். ஆனால் இவரது நேரமோ என்னமோ தெரியவில்லை எந்த திரைப்படமும் சரியாக பிக்கப் ஆகவில்லை. தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர் 48 திரைப்படத்தை எப்படியாவது எடுத்து விட வேண்டும் முழு முயற்சியில் இறங்கி வருகின்றார் சிம்பு. இதற்காக பல தயாரிப்பாளர்களிடம் பேசி வருகின்றார்.

ஒரு கட்டத்தில் இவரே தயாரிக்க போகின்றார் என்கின்ற தகவலும் வெளியாகி வந்தது. அதன் பிறகு எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை. அது அப்படியே கிடப்பில் போடப்பட்டிருக்கின்றது. இதற்கிடையில் டைனோசர்ஸ் படத்தின் இயக்குனருடன் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அது தொடர்பான எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை.

இந்நிலையில் நடிகர் சிம்பு அடுத்ததாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிப்பதற்கு தான் தற்போது தயாராகிக் கொண்டிருக்கின்றாராம். இதற்கிடையில் நடிகர் சிம்புவுக்கு ரெட் கார்டு பிரச்சனை வேற எழுந்துள்ளது. தக் லைப் திரைப்படத்திற்கு பிறகு சிம்பு எந்த திரைப்படத்திலும் நடிக்க கூடாது என்று கூறிவரும் நிலையில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கின்றது.

இதையும் படிங்க: சிங்கப்பெண்ணே முதல் மருமகள் வரை… டிஆர்பியில் பட்டைய கிளப்பும் சீரியல்களின் புரோமோ!..

இந்த நிறுவனம் தற்போது தயாரிப்பு குழுவில் ஒரு முக்கிய பதவியில் இருப்பதால் எப்படியும் சிம்புவின் ரெக்கார்டு பிரச்சனையை கொஞ்சம் பேசி சரி செய்து விடுவார்கள். இதனால் அடுத்ததாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படம் எப்படியும் டேக் ஆப் ஆகிவிடும் என்று நம்பப்படுகின்றது. எது எப்படியோ இது சிம்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. கடந்த ஒரு வருடங்களாக சிம்புவின் எந்த திரைப்படமும் வெளியாகாத நிலையில் ரசிகர்கள் இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

ramya suresh

Recent Posts

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

24 minutes ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

6 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

8 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

8 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

10 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

13 hours ago