தக் லைப் முடிச்சதும் சிம்பு செய்யப்போகும் வேலை!.. அடுத்த ரஜினி ஆகாம இருந்தா சரி!..

by சிவா |
simbu
X

Actor simbu: சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருபவர் சிம்பு. அப்பா டி.ராஜேந்தர் மகன் சிம்புவுக்கு லிட்டில் சூப்பர்ஸ்டார் என்கிற பட்டத்தை கொடுத்தார். இந்த பட்டம் சிம்புவிடம் பல வருடங்கள் இருந்தது. சின்ன வயதிலேயே பல ஹிட் படங்களை கொடுத்தார் சிம்பு. காதல் அழிவதில்லை படம் மூலம் ஹீரோவாக நடிக்க துவங்கினார்.

சிம்பு நடித்ததில் பெரும்பாலானவை காதல் படங்கள்தான். நடனம், நடிப்பு, சண்டை, இயக்கம், இசை, எடிட்டிங், ஒளிப்பதிவு என அப்பாவை போலவே எல்லா விஷயத்திலும் சிம்புவுக்கு அறிவு உண்டு. ஆனால், படப்பிடிப்புக்கு சரியாக போகாமல் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை கதறவிடுவார் என்கிற புகார் சிம்பு மீது எப்போதும் உண்டு.

ஒருபக்கம், சொந்த வாழ்வில் சில காதல் தோல்விகளையும் சிம்பு சந்தித்திருக்கிறார். முதலில் ஒரு பெரிய நடிகரின் மகளை இவர் காதலித்ததாகவும், அது பிரேக்கப் ஆகி சிம்புவை கோபப்படுத்தவே நடிகரின் மகள் இன்னொரு நடிகரை திருமணம் செய்து கொண்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

simbu

அதன்பின் வல்லவன் படத்தில் நடித்தபோது நயன்தாராவை காதலித்தார். இருவரும் லிப்லாக் கொடுத்துகொள்ளும் புகைப்படங்களும் வெளியானது. அதன்பின் அந்த காதலும் பிரேக்கப் ஆகி செய்தியாளர்கள் முன் கண்ணீர் விட்டார் சிம்பு. அதன்பின் ஹன்சிகா மோத்வானிக்கும் அவருக்கும் காதல் வந்தது.

என்ன காரணமோ அதுவும் பிரேக்கப் ஆனது. இதனால், ஆன்மிகத்தின் மீது சிம்புவுக்கு ஆர்வம் ஏற்பட்டது. பல மாநிலங்களுக்கும் சென்று கோவிலில் வழிபடுவதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார். சில வருடங்களுக்கு முன் விடிவி கணேஷுடன் சேர்ந்து ஊர் ஊராக கோவிலுக்கு போனார்.

இந்நிலையில், தக் லைப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் மீண்டும் ஒரு மாதம் ஆன்மிக பயணம் செல்லவிருக்கிறாராம் சிம்பு. இந்த முறை யாரும் அவருடன் செல்லவில்லை என்பதால் தனியாகவே போகிறார் என சொல்லப்படுகிறது. ஒரு மாதம் சுற்றுலாவுக்குப் பின் புதிய சிம்புவாக அவர் திரும்பி வருவார் என அவரின் நெருங்கிய நட்பு வட்டாரங்கள் சொல்கிறார்கள்.

இதையும் படிங்க: தக் லைப்பில் செய்த தரமான சம்பவம்!. இப்படி மாறிட்டாரே சிம்பு!.. வாயை பிளக்கும் திரையுலகம்!…

Next Story