சந்தானத்தை வாழவைத்ததே சிம்புதானாம்..! – இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கு..

by Rajkumar |   ( Updated:2023-03-15 08:46:12  )
சந்தானத்தை வாழவைத்ததே சிம்புதானாம்..! – இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கு..
X

விஜய் டிவியில் லொல்லு சபா நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் மூலம் பிரபலமடைந்து சினிமாவிற்கு வந்தவர் நடிகர் சந்தானம். நகைச்சுவை நடிகராக சினிமாவிற்கு வந்து படிபடியாக முன்னேறி தற்சமயம் கதாநாயகனாக திரைப்படங்கள் நடித்து வருகிறார்.

சந்தானம் போலவே சின்ன திரையில் மக்களை மகிழ்விக்கும் நட்சத்திரங்கள் பலர் உள்ளனர். ஆனால் அவர்கள் அனைவருமே சினிமாவிற்குள் வந்துவிடுவதில்லை. சினிமாவிற்கு அவர்கள் வருவதற்கு ஒரு நபரின் உதவி தேவைப்படுகிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் சினிமாவிற்குள் வருவதற்கு நடிகர் தனுஷ் உதவியது போல, சந்தானம் வருவதற்கு நடிகர் சிம்பு உதவியுள்ளார்.

Santhanam At The 'A1' Press Meet

லொள்ளு சபா நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி கொண்டிருந்த காலக்கட்டத்தில் சிம்பு தமிழ் சினிமாவில் அறிமுக கதாநாயகனாக இருந்தார். தொடர்ந்து கதாநாயகனாக நடிப்பதற்கு முயற்சி செய்து வந்தார்.

சந்தானத்திற்கு கிடைத்த வாய்ப்பு:

2000 ஆண்டுகளில் சிம்புவிற்கு கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. காதல் அழிவதில்லை என்கிற திரைப்படத்தில் இவர் கதாநாயகனாக நடிக்க இருந்தார். அந்த சமயத்தில் சந்தானமும் திரைத்துறையில் வாய்ப்புகளுக்காக முயற்சித்து வந்ததால் சிம்புவிற்கு அவரை தெரிந்திருந்தது.

kathal alivathillai

சந்தானத்திற்கு நல்ல நகைச்சுவை திறன் இருப்பதை கண்டு காதல் அழிவதில்லை திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்பு வாங்கி தந்தார். அதை தொடர்ந்து அலை, மன்மதன் என வரிசையாக சிம்பு தனது படங்களில் சந்தானத்திற்கு வாய்ப்பு கொடுத்தார். இப்படியாக ஆரம்பக்கட்டத்தில் சந்தானத்தை சிம்புவே சினிமாவில் வளர்த்துவிட்டுள்ளார்.

Next Story