'KH234' லிருந்து வெளியேறிய சிம்பு! பொன்னியின் செல்வனில் இருந்து தொடரும் பிரச்சினை - இதற்கு முடிவே இல்லையா?

Actor Simbu: கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு பிறகு கமலும் மணிரத்தினமும் ஒரு புதிய படத்தில் இணைய இருக்கிறார்கள். ஏற்கனவே அவர்கள் கூட்டணியில் வெளிவந்த நாயகன் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய தாக்கத்தையே ஏற்படுத்திவிட்டுச் சென்றது. ஒரு நிழல் உலக தாதாவாக கமலை அந்தப் படத்தில் அழகாக காட்டியிருப்பார் மணிரத்தினம்.

கமல் வெற்றிப் பாதையில் நாயகன் படம் ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. இந்த நிலையில் நாயகன் படத்திற்கு பிறகு மீண்டும் மணிரத்தினத்துடன் இணைந்திருக்கிறார் கமல்.

இதையும் படிங்க: கமலுக்கு அடுத்த படியாக அந்த ஒரு விஷயத்தில் இவர்தான்! சரத்குமாரை அடுத்து அடுத்த புரளியை கிளப்பிய அபிராமி

கமலுடன் அந்தப் படத்தில் நடிகர் சிம்பு ஒப்பந்தமாகியது பெரும் வைரலானது. ஆனால் இப்போது அந்தப் படத்தில் இருந்து சிம்பு வெளியேறி விட்டாராம். திடீரென சிம்பு வெளியேறியது ஏன் என்று அனைவருக்கும் குழப்பமாக இருந்தது.

அதன் பிறகு தான் ஓரளவுக்கு புரிந்தது. இந்தப் படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறாராம். ஒரு வேளை ஜெயம் ரவி உள்ளே வந்ததால்தான் சிம்பு படத்தில் இருந்து விலகினாரா என்றும் யோசிக்க வைத்தது.

இதையும் படிங்க: ஏ.ஆர்.ரஹ்மான் வாலியிடம் போட்ட கண்டிஷன்..வாலியோட ரியாக்‌ஷன் என்னனு தெரியுமா!..

இதே போல் ஒரு பிரச்சினைதான் பொன்னியின் செல்வன் படத்திலும் ஏற்பட்டது. வந்தியத்தேவனாக முதலில் சிம்பு நடிக்க இருந்ததாகவும் ஜெயம் ரவி உள்ளே வந்ததால் சிம்பு வெளியேறினார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதெல்லாம் பொய் என்றே சிம்புவும் ஜெயம்ரவியும் மேடையில் வெளிப்படையாகவே கூறினார்கள்.

ஆனால் இந்த முறையும் அப்படியே நடப்பதால் உண்மையிலேயே அவர்களுக்குள் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது என்றுதான் யோசிக்க வைக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்தில் கமல், ஜெயம் ரவியுடன் இணைந்து துல்கர் சல்மானும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இதையும் படிங்க: ஈஷா சார்பில் தமிழகத்தில் 6 இடங்களில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள்.. தொடங்கி வைக்கும் அமைச்சர்..

Rohini
Rohini  
Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it