தக் லைப் படத்தில் கமல் ஹீரோ இல்லையாமே!.. என்னப்பா சொல்றீங்க!..

Thug Life: கமலும் மணிரத்னமும் நெருங்கிய உறவினர்கள். கமலின் அண்ணன் சாருஹாசனின் மகள் சுஹாசினி. சுஹாசினிக்கு கமல் சித்தப்பா எனில் அவரின் கணவர் மணிரத்னத்துக்கு கமல் மாமனார் முறை. இருவரும் முதன் முறையாக இணைந்த திரைப்படம் நாயகன். இந்த படம் 1987ம் வருடம் வெளியானது. தமிழ சினிமாவின் உயரத்தை கொஞ்சம் மேலே உயர்த்திய படம் இது. உலக சினிமா தரத்தில் படமெடுக்க தமிழ் சினிமாவிலும் ஆள் இருக்கிறார்கள் என காட்டிய படம் இது.
இந்த படம் சினிமாவில் வரவேண்டும் என ஆசைப்பட்ட இளைஞர்களுக்கு பெரிய பாடமாக இருந்தது. ஃபிலிம் மேக்கிங் வகையிலும் இந்த படம் பலருக்கும் பாடம் எடுத்தது. இது ஹாலிவுட்டில் வந்த காட்பாதர் படத்தின் மேக்கிங் மற்றும் மும்பையில் கேங்ஸ்டராக இருந்த வரதராஜ முதலியார் என்பவரின் வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட்டிருந்தது.
அதன்பின் கமலும் மணிரத்னமும் இணையவே இல்லை. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொண்டாலும் சேர்ந்து படம் செய்யவில்லை. இவர்கள் இருவரும் எப்போது மீண்டும் இணைவார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வந்தது. இந்நிலையில்தான் 34 வருடங்களுக்கு பின் இப்போது தக் லைப் படத்தில் இருவரும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.
எனவே, இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தின் அறிவிப்பு வெளியானபோது படத்தில் கமல் மட்டுமில்லாமல் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் போன்றவர்களும் நடிப்பதாக செய்திகள் வெளியானது. அதன்பின் சிம்புவும், அசோக் செல்வனும் நடிப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்துகொண்டது. இதில் தேசிய அளவில் இருந்து பத்திரிக்கையாளர்கள் கலந்துகொண்டனர். கமல், மணிரத்னம், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் கலந்துகொண்டு இந்த படம் பற்றிய தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
இந்நிலையில், இந்த படத்தின் ஹீரோ சிம்புதான். அவரின் அப்பாவாக வரும் கமலுக்கு கௌரவ வேடம்தான். சிம்புவுக்குதான் அதிக காட்சிகள் என்கிற செய்தி இப்போது வெளியே கசிந்தது. சிம்பு ஹீரோ என்றாலும் கமலுக்கும் அதிக முக்கியத்துவம் இருக்கும்படி மணிரத்னம் காட்சிகளை அமைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.