Arasan: ஒரு பஞ்சாயத்து ஓவர்.. இன்னும் ஒன்னு இருக்கு!.. சிம்புன்னாலே சிக்கல்தான்…

Published on: December 10, 2025
arasan
---Advertisement---

சிம்புவையும் பஞ்சாயத்தையும் பிரிக்கவே முடியாது. இரண்டும் இரண்டரை கலந்தது என்றே சொல்லலாம். சிம்பு நடிக்கும் படம் என்றாலே அதில் சிக்கல்களும் பஞ்சாயத்தும் இருக்கும். அதற்கு ஒன்று சிம்புவே காரணமாக இருப்பார். அல்லது சிம்புவால் பாதிக்கப்பட்ட ஒருவர் காரணமாக இருப்பார்.

தயாரிப்பாளர் சங்கத்தில் இன்னும் இவர் மீது பல புகார்கள் உண்டு. குறிப்பாக அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு படத்தில் நடித்துக் கொடுக்க மாட்டார். இதை பல வருடங்களாகவே செய்து வருகிறார் சிம்பு.
ஆனால் ‘கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்’ என்று பன்ச் வசனம் பேசுவார். அதனால்தான் சிம்பு எப்போதும் திருந்தவே மாட்டார் என திரையுலகில் பலரும் சொல்வார்கள்.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் மூன்று படங்கள் நடித்துகொடுப்பதாக சொல்லி சில கோடிகள் அட்வான்ஸ் வாங்கினார் சிம்பு. ஆனால், ஒரு படத்தில் மட்டுமே நடித்தார். அந்த படமும் ஓடவில்லை. அடுத்த படத்தை நடித்துக் கொடுக்காமல் இழுத்தடித்தார். எனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஐசரி கணேசன். ஆனால் சிம்புக்கு அட்வான்ஸ் கொடுத்ததற்கு ஆதாரம் இல்லாததால் வழக்கு நிற்கவில்லை.
.

இந்நிலையில்தான் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடிக்க துவங்கியிருக்கிறார் சிம்பு. கண்டிப்பாக இந்த படத்திற்கு ஐசரி கணேஷ் பிரச்சனை செய்வார் என நினைத்த கலைப்புலி தாணுவும் வெற்றிமாறனும் அவரிடம் பேச்சுவாரத்தை நடத்தினார்கள். ஆனால், அவர் சம்மதிக்கவில்லை. அதன்பின் சிம்புவே அவரிடம் பேசி வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்துவிடுகிறேன் என சொன்னதால் பிரச்சனை முடிந்துவிட்டது.

அதேநேரம் வேறொரு ரூபத்தில் அரசன் படத்திற்கு பிரச்சனை வரலாம் என எதிர்பார்க்கிறார்கள். தக் லைப் படத்திற்கு பின் டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதில் சந்தனமும் நடித்ததாக அறிவிக்கப்பட்டு பூஜையெல்லாம் நடந்தது. ஆனால் அந்த படம் டிராப் ஆகிவிட்டது.

டான் பிக்சர்ஸ் நிறுவனமும் சிம்புவுக்கு சில கோடிகள் அட்வான்ஸ் கொடுத்துள்ளனர். சிம்பு இன்னமும் அதை திருப்பி தரவில்லை. எனவே அவர்கள் என்.ஓ.சி கொடுக்காமல் அரசன் படத்தின் ஷூட்டிங்கில் சிம்பு கலந்து கொள்ள முடியாது என்கிறார்கள். இந்த பிரச்சினையைப் பேசி சரி செய்து விட்டார்களா? சிம்பு பணத்தை திருப்பி கொடுத்து விட்டாரா? என்கிற தகவல் எதுவும் வெளியாகவில்லை.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.