சி.எம் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்.. சிம்பு அம்மா ஆவேச பேட்டி

நடிகர் சிம்பு தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டு வேகமாக படங்களில் நடித்து கொடுக்க துவங்கியுள்ளார். ஈஸ்வரன், மாநாடு ஆகிய படங்களின் படப்பிடிப்பு ஜெட் வேகத்தில் நடந்து முடிந்தது. சிம்புவிடம் ஏற்பட்ட இந்த மாற்றம் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

அதேநேரம், அவர் மீதான பழைய பஞ்சாயத்துக்கள் தற்போது தூசி தட்டப்பட்டு வருகிறது. முக்கியமாக, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திற்கு சிம்பு சரியாக ஒத்துழைப்பு கொடுக்காததால் அப்படம் முழுமையாகமலே வெளியானதால் அப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு 10 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது.

simbu

எனவே, சிம்பு தனக்கு ரூ.6 கோடி கொடுக்க வேண்டும் என அப்போதே அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். எனவே, சிம்புவை தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்து விளக்கம் அளிக்கும் படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சிம்பு வராததால் அவர் மீது அறிவிக்கப்படாத ரெட் கார்டும் விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: 3 வருஷமா யோசிச்சு கார்ட்டூன் கதையை சுட்ட இயக்குனர்…அதிர்ந்து போன தனுஷ்….

இதைத்தொடர்ந்து, சிம்புவின் ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும் போதும் இது தொடர்பான பிரச்சனைகள் கிளம்புவதும், சிம்புவின் தாய் உஷா மற்றும் தந்தை டி.ராஜேந்தர் ஆகியோர் பஞ்சாயத்து பேசி படத்தை ரிலீஸ் செய்வது தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் சில பிரச்சனைகள் தீர்க்கப்பட்டது. ஆனால், மைக்கேல் ராயப்பன் பிரச்சனை மட்டும் தொங்கி நிற்கிறது.

simbu

simbu

தற்போது மாநாடு படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த பிரச்சனை காரணமாக இப்படம் நவம்பர் 25ம் தேதிக்கு தள்ளிப்போயுள்ளது.

இந்நிலையில், சிம்புவின் அம்மா உஷா மற்றும் டி ராஜேந்தர் இருவரும் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உஷா ‘ஒவ்வொரு முறையும் சிம்பு நடிக்கும் படம் வெளியாகும் போதும் பிரச்சனை செய்கிறார்கள். AAA படம் நஷ்டம் எனில் மைக்கேல் ராயப்பன் வினியோகஸ்தர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.

இதையும் படிங்க: இந்த ஒன்னே நின்னு பேசும்!… அந்த இடத்தை க்ளோஸ் அப்பில் காட்டிய ரித்திகா சிங்…

ஆனால், சிம்பு தர வேண்டும் என கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறார். தயாரிப்பாளர் சங்கமும் ஒவ்வொருமுறையும் எங்களிடம் பல கோடி பெற்ற பின்னரே படத்தை ரிலீஸ் செய்கிறது. அரசு அவர்கள் பக்கம் இருப்பது ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள். எனவே, இதை தடுக்க முதல்வர் வீட்டின் முன்பு உண்ணாவிரதம் இருப்பதற்கு தயராக இருக்கிறேன்’ என அவர் பேசியுள்ளார்.

 

Related Articles

Next Story