அடுத்தடுத்து 5 படங்கள்!. ஹிட் பட இயக்குனர்கள்!.. தனுஷ், எஸ்.கே-வுக்கு டஃப் கொடுக்கும் சிம்பு!..

by சிவா |   ( Updated:2025-05-06 23:51:44  )
str
X

#image_title

அப்பா டி.ராஜேந்தரால் சின்ன வயதிலேயே சினிமாவுக்கு வந்தவர்தான் சிம்பு. சின்ன வயதிலேயே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். டி.ஆர் இவருக்கு லிட்டில் சூப்பர்ஸ்டார் என்கிற பட்டத்தையும் கொடுத்தார். காதல் அழிவதில்லை படம் மூலம் சினிமாவில் ஹீரோவாக நடிக்க துவங்கினார்.

அதன்பின் பல படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். நடனம் ஆடுவது, பாட்டு பாடுவது, இசை, ஒளிப்பதிவு, இயக்கம், கதை, திரைக்கதை என எல்லாவற்றிலும் சிம்புவுக்கு ஞானம் உண்டு. ஆனால், படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு செல்லாமல் இயக்குனர்களிடமும், தயாரிப்பாளர்களிடமும் கெட்ட பெயர் வாங்கினார்.

இதனால் சிம்புவை வைத்து படமெடுக்கவே தயாரிப்பாளர்கள் யோசித்தார்கள். ஆனாலும், அவ்வப்போது ஹிட் படங்களை கொடுப்பதால் சிம்புவின் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு ஹிட் கொடுத்துவிட்டு 2 பிளாப் கொடுப்பார். அதன்பின் 2 வருடங்கள் காணாமல் போய்விடுவார். பத்து தல படம் வெளியாகி 2 வருடங்களாகியும் சிம்புவின் அடுத்த படம் இன்னமும் வெளியாகவில்லை.

இடையில் ஒன்றரை வருடம் வெளிநாட்டிலே இருந்தார். அதோடு, நீண்ட முடி வளர்த்து ஆளே மாறினார். தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அது டேக் ஆப் ஆகவில்லை. இப்போது அந்த படத்தை சிம்புவே தயாரிப்பதாகவும் முடிவெடுத்திருக்கிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைப் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ளது. அடுத்து பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து சந்தானமும் நடிக்கவுள்ளார். அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

இந்த 3 படங்கள் மட்டுமில்லாமல் லைக்கா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கும் ஒரு படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படமும் என பேசி வருகிறார்கள். எனவே, அடுத்த 4 வருடத்திற்கு சிம்பு தொடர்ந்து நடிக்க திட்டமிட்டிருக்கிறார். இவருக்கு பின்னால் வந்த தனுஷ், சிவகார்த்திகேயன் எல்லாம் இவரை ஓவர்டேக் செய்து போய்விட்டதால் மீண்டும் தனது இடத்தை பிடிக்க சிம்பு திட்டமிட்டிருக்கிறார் என்றே புரிந்துகொள்ள முடிகிறது.

Next Story