’மாநாடு’ படத்திற்காக அந்த பக்கமே போகல...! இம்ஷைகளுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு முழித்த சிம்பு...
நடிகர் சிம்பு தற்போது பத்து தல என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவரின் நடிப்பில் வெந்து தணிந்தது காடு என்ற படமும் செப்டம்பர் 15 ஆம் தேதி திரைக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் மகா ஆடியோ லாஞ்ச் செப்டம்பர் 2 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு கமல் ,ரஜினி போன்றோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது.
இதற்கு மத்தியில் இவரின் ரிஎன்ரி படமான மாநாடு பெரிய வெற்றிக்கு பிறகு தான் தொடர்ச்சியாக பல படங்கள் அவரை தேடி வந்தது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க வெற்றிபடமாக விளங்கியது மாநாடு. இந்த படத்தில்சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார்.
மேலும் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடித்திருந்தார். படம் மாபெரும் வெற்றியடைந்தது. மேலும் படத்திற்காக மிகவும் தன் உடம்பை குறைத்துக் கொண்டு ஸ்லிம்மாக வந்து தோன்றினார். மேலும் இந்த படத்திற்காக ஒரு வருடமாக தன் ஆல்கஹால் எடுக்கவே இல்லை. குடிக்கிறத கூட விட்டுட்டேன் என சிம்பு கூறினார்.
மேலும் படத்தில் ஒரு வருடமாக என்னுடன் பிரேம்ஜி இருந்தும் எனக்கு குடிக்கிற விருப்பம் வரவில்லை என கூறினார். இதன் மூலம் அந்த அளவுக்கு பிரேம்ஜி டார்ச்சர் பண்ணியிருப்பார் என அவர் சொல்வதில் இருந்தே தெரிகிறது.