எத்தன தடவதான் எஸ்கேப் ஆவ!.. சிம்புவுக்கு கிடுக்குப்பிடி போட்ட திரையுலகம்..

Published on: June 6, 2023
simbu
---Advertisement---

கோலிவுட்டில் ஒரு முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இப்போது தான் தனக்கு உண்டான எல்லா பிரச்சினைகளையும் களைந்து ஒரு புது பொலிவுடன் சினிமாவில் உலா வந்து கொண்டிருக்கிறார். மாநாடு படத்தின் வெற்றி சிம்புவை புகழின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது. சரியான நேரத்தில் அதிரடியான கம்பேக் கொடுத்து மற்ற நடிகர்களை திணற வைத்தார் சிம்பு.

தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து திரும்ப வந்துட்டேனு சொல்லு என்ற வசனத்திற்கு சொந்தக்காரராகவே விளங்கினார். பத்து தல படத்திற்கு பிறகு கமல் புரடக்‌ஷனில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருந்தார் சிம்பு. அந்த படத்திற்கான வேலைகள் ஆரம்பமாகும் நேரத்தில் தயாரிப்பு கமிட்டியில் சிம்புவின் மேல் ஒரு புகார் எழுந்துள்ளது.

simbu1
simbu1

அதாவது பிரபல தயாரிப்பாளரான ஐசரி கணேசன் தான் இந்த புகாரை கொடுத்திருக்கிறார். ஏனெனில் வெந்து தணிந்தது காடு படத்திற்கு பிறகு அவரது கம்பெனிக்கே சிம்பு தொடர்ந்து மூன்று படங்கள் நடித்து கொடுப்பதாக கூறியிருந்தாராம். ஆனால் பத்து தல படத்திற்கு பிறகு ஒன்றுமே சொல்லாமல் கமலுடன் கூட்டணி வைத்துவிட்டது ஐசரி கணேசனுக்கு ஒரு அதிர்ப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் கொரானா காலத்தில் கொரானா குமார் என்ற படத்திலும்  நடிப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் உண்மையிலேயே இந்தப் படத்திற்காக ஒரு இரண்டு நாள்கள் சூட்டிங் போனாராம் சிம்பு. ஆனால் அந்தப் படமும் நின்று விட்டது. அதனால் சிம்புவிடம் சுமூகமாக பேசிப்பார்த்த ஐசரி கணேசன் இனிமேல் இது வேலைக்கு ஆகாது என்று கருதியதால் நேராக புதியதாக அமைக்கப்பட்ட தயாரிப்பு கமிட்டியில் புகார் ஒன்றை கொடுத்து விட்டாராம்.

simbu2
simbu2

புகாரை விசாரித்த அந்த கமிட்டி அந்த கொரானா படத்தையும் முடித்துக் கொடுத்த பிறகே சிம்பு வேறு எந்தப் படத்திலும் நடிக்க வேண்டும் என்ற உத்தரவையும் போட்டிருக்கிறதாம்.இப்பொழுது சிம்பு லண்டனில் இருப்பதால் இந்த விஷயம் தெரிந்து அவர் சீக்கிரம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பார் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க : இதெல்லாம் பேச முடியாது! பயந்தோடிய எம்ஜிஆர் – தூக்கி நிறுத்திய சிவாஜி! இப்படியெல்லாம் நடந்துருக்கா?

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.