பிரபல நடிகரும் இயக்குனருமான சிங்கம் புலி நடிகர் முரளி குறித்து புகழ்ந்து பேசி இருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் பலருக்கும் சிங்கம் புலி என்று கூறினால் அவர் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர் என்று கூறுவார்கள். ஆனால் அதற்கெல்லாம் முன்பு ஒரு மிகச்சிறந்த இயக்குனர். நடிகர் அஜித்தை வைத்து ரெட் என்ற திரைப்படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து மாயாவி என்ற திரைப்படத்தையும் இயக்கி இருக்கின்றார்.
இது பலருக்கும் தெரியாத ஒரு உண்மை. இயக்குனராக இருந்த சிங்கம் புலி மாயாண்டி குடும்பத்தார் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் நகைச்சுவை நடிகராக மாறினார். அதில் மனவளர்ச்சி குன்றிய ஒரு நபராக நடித்து பலரையும் சிரிக்க வைத்திருப்பார். அவரின் காமெடிகள் அப்படத்தில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
தன்னுடைய சிறப்பான நடிப்பால் பலரையும் சிரிக்க வைத்த சிங்கம் புலி மகாராஜா திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார். விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாக வெளியானது மகாராஜா. இந்த திரைப்படம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் காஷ்யப், சிங்கம் புலி, பாரதிராஜா, முனிஷ் காந்த், நட்டி நட்ராஜ் உள்ள பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அதிலும் ஒரு குழந்தையை கற்பழிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சிங்கம் புலி.
இதற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் வந்தது இந்த படத்தை தொடர்ந்து சில இன்டர்வியூக்கலில் பேசி இருந்த அவர் தெரிவித்திருந்ததாவது இயக்குனர் கூறுவதை செய்வது ஒரு நல்ல நடிகனுக்கான வேலை என்று அவர் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து பேசிய சிங்கம் புலி நடிகர் முரளி தொடர்பாக பகிர்ந்திருந்தார்.
அதாவது சினிமாவிற்காக மெனக்கட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் முரளி. ஒரு படத்திற்காக நிறைய ஹீரோக்கள் இடம் கதை கூறினேன். கதையை கேட்டுவிட்டு மொட்டை அடிக்க வேண்டும் என்று சொன்னதும் பின்வாங்கி விட்டார்கள். மேலும் மொட்டை அடித்து விட்டு ரெண்டு வருஷம் உங்க பின்னாடி சுத்தணுமா என்று கேட்டார்கள்.
இதைத் தொடர்ந்து கடைசியாக தான் முரளியிடம் இப்படத்தை கூறினேன். உடனே எப்போ மொட்டை அடிக்கணும் என்று கேட்டார் . இப்போ ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன், அதை முடித்துவிட்டு உடனே அப்படத்தை பண்ணி விடலாம் என்று கூறினார். அந்த சந்திப்பு தற்போது வரை எனது மனதில் இருக்கின்றது. அவர் ஒரு உன்னதமான மனிதர் என்று புகழ்ந்து பேசி இருக்கிறார்.
Pushpa2 Review:…
Power Star: தமிழ்…
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…