More
Categories: Cinema News latest news

சிங்கம்புலி மகாராஜா படத்துல நடிக்க அந்தப் படங்கள் தான் காரணமாம்…! அட இப்படி எல்லாமா யோசிப்பாரு?

மகாராஜா படத்துல சிங்கம்புலி இப்படி கொடூரமான நெகடிவ் கேரக்டர்ல
நடிப்பாருன்னு யாருமே நினைச்சிருக்க மாட்டாங்க. ஆனா அவரு எதுக்காக இப்படி நடிக்க சம்மதிச்சாருன்னு தான் எல்லாரும் கேட்கிறாங்க. அதுக்கு அவர் என்ன பதில் சொல்றாருன்னு பாருங்க…

ஆண்டவன் கட்டளை, கருப்பன் படங்கள் எல்லாத்துலயும் விஜய் சேதுபதி நல்லாருக்கணும்னு நினைக்கிற கேரக்டர். இந்தப் படத்துல மட்டும் அவரு நல்லாருக்கக்கூடாதுன்னு நினைக்கிற கேரக்டர். இதை நான் காசுக்காக பண்ணல.

Advertising
Advertising

இதையும் படிங்க… கமலை வைத்து எம்ஜிஆர் போட்ட மெகா திட்டம்… அப்புறம் என்ன ஆச்சுன்னு தெரியுமா?

எப்படி ஒரு கெட்டதைக் காமிச்சி இப்படி இருக்கக்கூடாதுன்னு சொல்வாங்களோ அதுக்காகத் தான் நடிச்சேன். என்னைப் பார்த்து நிறைய பேரு திருந்துனாங்கன்னா அதுக்கு நான் ஒரு படிக்கல்லா இருந்தா அதுவே போதும்.

இந்தக் கேரக்டருக்கு நான் எப்படி ஒத்துக்கிட்டேன்னா அதுக்கு டைரக்டர் நித்திலன் சாரும், விஜய் சேதுபதியும் தான் காரணம். தயாரிப்பாளரும் முடிவு பண்ணி விட்டார். நானும் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்னு நினைச்சித் தான் பண்ணினேன். அதுவும் ஒரு வாரம் யோசிச்சித்தான் முடிவு பண்ணினேன். 16 வயதினிலே படத்துல ரஜினி சாரே ரேப் பண்ணப் போவாரு.

அவரை ஊனமா இருக்குற கமல் கல்லைப் போட்டுக் கொல்வாரு. டி.எஸ்.பாலையா தான் ‘மதுரை வீரன்’ல எம்ஜிஆருக்கு மாறு கால் மாறு கை வாங்குவாரு. அதுக்கு அப்புறம் அவரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தில்லானா மோகனாம்பாள் படத்துல காமெடியா நடிக்கலையா?

ஒரு ஆக்டரா நம்மை எதுவும் செய்யலாம் அப்படிங்கறதுக்காக இதை எடுத்துக்கங்கன்னு நிறைய பேரு சொல்றாங்க. அடுத்தடுத்த படங்களில் நிறைய ஹியூமரும் இருக்கு. ஆனா இனி மகாராஜா பட கேரக்டர் மாதிரி நடிக்கறதுக்கு ரொம்ப யோசிக்கணும் என்கிறார்.

இதையும் படிங்க… கிளப்பிட்டாங்கய்யா… கிளப்பிட்டாங்கய்யா… அஜீத் அரசியலுக்கு வருகிறாரா…? வந்தா விஜய் மாதிரி இருக்காதாம்…!

நடிச்சது நடிச்சதுதான். அதை இனி மாத்த முடியாது என்று தெரிந்ததும் சிங்கம்புலியின் முகத்தில் பேட்டி கொடுக்கும்போது பல மாறுதல்களும், ஒரு வித மன இறுக்கமும் தென்படுவதைப் பார்க்க முடிகிறது. இனியும் ரசிகர்கள் அவர் காமெடியாக நடிப்பதை ஏற்றுக்கொள்வார்களா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Published by
ராம் சுதன்

Recent Posts