எப்படிப்பா? இவர வைச்சு அந்தப் படமா?.. இடியாப்பச் சிக்கலில் இருக்கும் வித்தியாசமான கூட்டணி..

siva
தமிழ் சினிமாவில் ஒரு பட்டத்திற்கு போட்டிப் போட்டுக் கொண்டு ஒரு கூட்டமே விவாதத்தில் இருக்கும் போது எல்லாருக்கும் நான் அப்பன் என்கிற மாதிரி அகில உலக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை சத்தமே இல்லாமல் வைத்துச் சுற்றிக் கொண்டு இருக்கும் நடிகர் தான் மிர்ச்சி சிவா.

siva1
எப்பொழுதும் ஒரு கலகலப்பு, பேச்சில் நக்கல் என தன்னை சுற்றி இருப்பவர்களை சிரிப்பு மழையில் சிறகடிக்க வைக்கக் கூடிய ஒரு உன்னதமான நடிகர் மிர்ச்சி சிவா. ஆரம்பகால படங்களில் கதை அவ்ளவாக இல்லையென்றாலும் வாழ்க்கையில் எதார்த்தமாக பேசக்கூடிய நகைச்சுவையால் அனைவரையும் ரசிக்க வைத்தவர்.
இதையும் படிங்க :விஜய் பட இயக்குனரை நம்பி மோசம் போன மகேஷ் பாபு… அடக்கொடுமையே!!
படம் பெரும்பாலும் சரியாக அமையவில்லை என்றாலும் இவருக்கு என்று ஒரு தன் ரசிகர்களே இருக்கின்றனர். மேடையில் ஹோஸ்ட் பண்ணும் போது அந்த ரசிகர்களின் கூச்சலை பார்த்தாலே தெரியும். இந்த நிலையில் அவரது நடிப்பில் சுமோ என்ற படம் முடிந்து நீண்ட நாள்களாயினும் இன்னும் ஏதோ ஒரு காரணத்தால் வெளிவராமல் இருக்கின்றது.

siva2
இருந்தாலும் அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதிலும் பெரிய ஷாக் ஆன விஷயம் என்னவென்றால் அடுத்ததாக இயக்குனர் ராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம் மிர்ச்சி சிவா.
கேட்டதும் பல பேருக்கு ஷாக் ஆகிவிட்டது. ஏனெனில் இயக்குனர் ராம் எந்தெந்த கோணங்களில் படம் எடுப்பார் என்று தமிழ் சினிமாவிற்கே தெரியும். அதே வகையில் மிர்ச்சி சிவா எப்படிப்பட்ட ஹுயுமர் சென்ஸான ஆள் என்றும் தெரியும்.

siva3
அவருக்கும் இவருக்கும் எப்படி செட் ஆகும் என்று புலம்பி வருகின்றனர். படமும் எந்த நிலைமைக்கு வரப் போகும் என்றும் புலம்புகின்றனர். கேட்ட நமக்கே இப்படி என்றால் இவர்கள் இருவரும் எப்படி இணைந்தார்கள் என்று கோடம்பாக்கமே ஆச்சரியத்தில் இருக்கின்றனராம்.