சிவாஜியே பார்த்து பயந்த இரண்டு நடிகர்கள்... அட இது தெரியாம போச்சே!...

திரைத்துறையை பொறுத்தவரை நடிப்புக்கு இலக்கணம் என்றால் அது சிவாஜி கணேசன்தான். அதனால்தான் அவருக்கு நடிகர் திலகம் என்கிற பட்டம் கிடைத்தது. இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை எனக்கூறும் அளவுக்கு பலவிதமான வேடங்களில் நடித்து அசத்தியவர்.

இளைஞர், நடுத்தர வயது நபர், குடும்பத்தலைவர், வயதானவர், அப்பா, குணச்சித்திரம், கடவுள் கதாபாத்திரங்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், சரித்திர நாயகர்கள் என பல கதாபாத்திரங்களையும் கண்முன் கொண்டு வந்தவர் செவாலியர் சிவாஜி. இவரின் தாக்கம் இல்லாமல் எந்த நடிகரும் இருக்க முடியாது என்கிற அளவுக்கு நடித்து முடித்துவிட்டார்.

sivaji1

ஆனால், சிவாஜியே பார்த்து பயப்பட்ட இரண்டு நடிகர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் நம்புவீர்களா?.. உண்மையில் அப்படி இரண்டு நடிகர்கள் இருந்தார்கள். அதில் ஒருவர் சாவித்ரி. இவரை ஆண் சிவாஜி என்றே ரசிகர்கள் அழைத்தனர். சிவாஜி நடிகர் திலகம் எனில், இவர் நடிகையர் திலகம். இவரும் பல விதமான வேடங்களில் அசத்தலான நடிப்பை கொடுத்தவர்.

இவருடன் சிவாஜி பல படங்களில் நடித்தார். சாவித்ரியுடன் நடிக்கும்போது எந்த நேரத்திலும் தன்னை நடிப்பில் ஓவர்டேக் செய்துவிடுவார் என்பதால் சிவாஜி மிகவும் கவனமாகவே நடிப்பாராம். இருவரும் சேர்ந்த நடித்த ‘பாசமலர்’ திரைப்படம் இப்போதும் பல அண்ணன் தங்கச்சி கதை திரைப்படங்களுக்கு அடிநாதமாக இருக்கிறது.

savithri

savithri

அதேபோல், சிவாஜி பார்த்து பயந்த இன்னொரு நடிகர் என்றால் அது எம்.ஆர்.ராதாதான். இவரும் மிகச்சிறந்த நடிகர்தான். நடிகவேள் என்கிற பட்டத்தை பெற்றவர். கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம் என பல வேடங்களில் நடித்தவர். நக்கல், நையாண்டி கலந்த வில்லத்தனம், பகுத்தறிவு சிந்தனை கொண்ட வசனங்கள் என ரசிகர்களை கவர்ந்தவர்.

radha

mr radha

இவருடன் நடிக்கும்போதும் சிவாஜி எச்சரிக்கையாக இருப்பாராம். ஏனெனில், சிவாஜி அடுக்கடுக்கான வசனங்களை பேசினாலும், திடீரென ஒரு வசனத்தை பேசி ரசிகர்களின் பார்வை அவர் பக்கம் திரும்பும் படி செய்துவிடுவாராம்.

இதையும் படிங்க: பெண் இயக்குனரின் மனதை காயப்படுத்திய எம்.ஜி.ஆர்… என்ன இருந்தாலும் இப்படியா பண்றது??

Related Articles
Next Story
Share it