பல்ல உடைப்பேன் ராஸ்கல்.. இவன கட்டி போடுங்கடா!.. எஸ்.பி.பி-யிடம் கடுப்பான சிவாஜி...

by சிவா |   ( Updated:2023-05-22 12:34:50  )
spb
X

திரையுலகில் எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் முதல் பாடல்களை பாடியவர் பின்னணி மறைந்த பாடகர் பாலசுப்பிரமணியம். கல்லூரியில் படிக்கும்போது இவர் பாடிய ஒரு நிகழ்ச்சியில் நடுவராக சென்ற பாடகி எஸ்.ஜானகி இவரின் திறமையை முதலில் கண்டறிந்தார். நீ சினிமாவில் பாடவேண்டும் என அவர்தான் அறிவுரையும் சொன்னார். அதன்பின்னரே எஸ்.பி.பி சென்னை வந்து வாய்ப்பு தேடினார். எம்.எஸ்.வி உள்ளிட்ட பலரிடமும் நேரில் சென்று வாய்ப்பு கேட்டார். ஆனால் ‘உன் குரலில் இன்னும் முதிர்ச்சி ஏற்படவில்லை. சின்ன பையன் குரல் போல இருக்கிறது’ என சொல்லி அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

spb

spb

அதன்பின் ஒருவழியாக எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப்பெண் படத்தில் ஒரு பாடலை எஸ்.பி.பி பாடினார். அதேபோல், சிவாஜிக்கும் சில பாடல்களை அவர் பாடியுள்ளார். 1970 முதல் 2000 வரை தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்தார்.

spb

அப்படிப்பட்ட எஸ்.பி.பியிடம் சிவாஜி கோபப்பட்ட சம்பவம் ஒன்று படப்பிடிப்பில் நடந்தது. இதுபற்றி ஒரு ஊடகத்தில் பேசிய எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ‘ஒருமுறை சிவாஜியை பார்க்க விரும்பினேன். பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு படப்பிடிப்பில் இருப்பதாக கூறி என்னை அங்கு வர சொன்னார். நான் அவர் அருகில் சென்ற போது ‘என்னடா உடம்பு இது?. தார் டப்பா மாதிரி இருக்கு.. இந்த உடம்ப வச்சிக்கிட்டு எப்படிடா நடக்குறே?’ என என்னிடம் கேட்டார்.

அதற்கு நான் ‘நீங்க ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா?’ என கேட்டேன். அதற்கு அவர் ‘டேய் என்னடா பேசுற?’ என்றார். நான் மீண்டும் ‘அப்புறம்.. உங்க பசங்க பிரபு, ராம்குமார், அண்ணி எல்லாரும் ஒல்லியா இருக்காங்களா’ என கேட்டேன். உடனே அவர் ‘யாருடா அங்க.. இவன கட்டி போடுங்கடா.. பல்ல உடைச்சுடுவேன் ராஸ்கல்’ என கத்தினார். அங்கிருந்த எல்லோரும் ‘என்னடா இவன் சிவாஜிக்கிட்ட போய் இப்படி பேசிட்டான்’ என அதிர்ச்சியாக பார்த்தார்கள். அதன்பின் சிரித்துவிட்டு என்னை கட்டி அணைத்துகொண்டார். விளையாட்டாகத்தான் என்னிடம் அப்படி பேசினார். அந்த அளவுக்கு எனக்கு செல்லம் கொடுப்பார்’ என எஸ்.பி.பி. பேசியிருந்தார்.

Next Story