மூனு வேளை சாப்பட்டுக்கே கஷ்டப்பட்ட நடிகர் திலகம்!.. ஒரு பிளாஷ் பேக்!…

Published on: September 13, 2024
Sivaji
---Advertisement---

Sivaji ganesan: நடிகர் சிவாஜி எப்படிப்பட்ட நடிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். பராசக்தி திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். முதல் படமே அவருக்கு பெயரை வாங்கி கொடுத்தது. முதல் படத்திலேயே தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்து காட்டினார் சிவாஜி.

பராசக்தியில் துவங்கிய கலைப்பயணம் கடைசி வரை நிற்கவில்லை. பல கதாபாத்திரங்களில் வாழ்ந்து தான் ஒரு மிகச்சிறந்த நடிகர் என்பதை நிரூபித்து காட்டினார். ரசிகர்கள் இவரை நடிகர் திலகம் எனவும் அழைத்தார்கள். சினிமாவில் சிவாஜி ஏற்காத வேடமே இலை என்கிற அளவுக்கு பல வேடங்களிலும் நடித்தார்.

இதையும் படிங்க: சிவாஜியின் அறிவுரையை ஏற்றுக் கொண்ட ரஜினி… எம்ஜிஆருக்கு காட்டிய டாட்டா

ஆக்‌ஷன் காட்சிகளை விரும்பியவர்கள் எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் ஆனார்கள் எனில், நடிப்பையும், செண்டிமெண்ட் காட்சிகளையும் விரும்பியவர்கள் சிவாஜிக்கு ரசிகர்களாக மாறினார்கள். ஆனால், எம்.ஜி.ஆரே சிவாஜியின் ரசிகராக இருந்தார் என்பது பலருக்கும் தெரியாது.

சிறு வயதிலேயே தான் ஒரு ஆனாதை என சொல்லி நாடக கம்பெனியில் சேர்ந்து கொண்டார் சிவாஜி. நடிப்பே அவரின் உலகமாக மாறியது. காலை எழுந்தவுடன் நடிப்பு பயிற்சி தொடங்கும். பாட்டு பாடுவது, வசனம் பேசுவது, நடித்து காட்டுவது என பயிற்சிகள் துவங்கும். சிறுவன் சிவாஜி கையில் எப்போதும் வசன புத்தகம் இருந்துகொண்டே இருக்கும்.

Sivaji 24
Sivaji 24

நாடக கம்பெனியில் பயிற்சி கிடைத்தாலும் சாப்பாடு மட்டும் மூன்று வேளைக்கும் கிடைக்காது. பொதுவாக சாம்பார், ரசம், பொறியல் என சொல்வார்கள். ஆனால், நாடக கம்பெனியில் ஏதேனும் ஒன்றுதான் கிடைக்கும். ஆனாலும், நடிப்பையே தனது வாழ்க்கை என தேர்ந்தெடுத்த சிவாஜி அதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டார்.

அப்போது விகே ராமசாமியெல்லாம் அவருக்கு சீனியர். எனவே, அவரின் துணிகளை துவைத்து கொடுத்து அதில் கிடைக்கும் பணத்தில் வெளியே போய் சினிமா பார்ப்பது, விரும்பியதை வாங்கி சாப்பிடுவது என இருந்திருக்கிறார் சிவாஜி. சிவாஜி வாழ்ந்த அன்னை இல்லத்தின் சாப்பாடு என்றாலே சினிமா உலகில் மிகவும் பிரபலம். ஆனால், சிறுவனாக இருந்த நடிகர் திலகம் பல வேளைகள் பட்டினி கிடந்தார் என்பது பலருக்கும் தெரியாது.

இதையும் படிங்க: நடிப்பு சரியில்லன்னு சொன்ன இயக்குனர்… சிவாஜியை சமாளித்த கமல்..!

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.