கதையை கேட்டு ஏமாந்திட்டேன்; இப்படியா படம் எடுப்பான்?!.. எல்லோரிடமும் புலம்பிய சிவாஜி
ஒரு கதையை இயக்குனர் ஒரு நடிகரிடம் சொல்வார். அந்த கதை நடிகருக்கு பிடித்திருந்தால் அந்த படத்தில் நடிக்க நடிகர் சம்மதிப்பார். இல்லையேல், என்னால் நடிக்க முடியாது என சொல்லிவிடுவார். இதுதான் காலம் காலாமாக நடந்து வருவது. அதேபோல், சில இயக்குனர்கள் கதையை சொல்லும்போது நன்றாக இருப்பது போலவே இருக்கும். ஆனால், படத்தை எடுத்தபின் பார்த்தால் மொக்கையாக இருக்கும். இந்த அனுபவம் பல நடிகர்களுக்கும் நடந்துள்ளது. இது நடிகர் திலகம் சிவாஜிக்கும் நடந்துள்ளது.
என் ராசாவின் மனசிலே படம் மூலம் இயக்குனராக மாறியவர் கஸ்தூரி ராஜா. ஆத்தா உன் கோயிலிலே, சோலையம்மா, தாய் மனசு, நாட்டுப்புற பாட்டு, எட்டுப்பட்டி ராசா உள்ளிட்ட பல கிராமத்து கதைகளை இயக்கியுள்ளார். சிவாஜியை வைத்து இவர் இயக்கிய திரைப்படம் என் ஆசை ராசாவே. இப்படத்தில் சிவாஜியுடன் முரளி, ராதிகா, ரோஜா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். இந்த படம் 1998ம் வருடம் வெளியானது.
இந்த படத்தின் கதையை கேட்டதும் ‘கதை நன்றாக இருக்கிறதே’ என அப்படத்தில் நடிக்க சிவாஜி ஒப்புக்கொண்டாராம். வயதான நிலையிலும் இந்த படத்தில் கரகத்தை தூக்கி நடனமெல்லாம் ஆடியிருந்தார் சிவாஜி. ஆனால், படம் முழுவதும் முடிந்து பார்த்த பின் சிவாஜி அதிர்ந்து போய்விட்டாராம். தன்னை வைத்து பாரதிராஜா ‘முதல் மரியாதை’ எடுத்தது போல் இந்த படம் இருக்கும் என நினைத்தே அப்படத்தில் நடித்துள்ளார். ஆனால், அந்த படம் அப்படி இல்லாமல் மொக்கையாக இருந்ததால் ஏமாற்றம் அடைந்துவிட்டாராம். இதுபற்றி தனக்கு நெருக்கமானவர்களிடம் ‘கதையை கேட்டு ஏமாந்திட்டேன்; இப்படியா படம் எடுப்பான்’ என புலம்பி தீர்த்துவிட்டாராம்.