Cinema History
நாங்களும் இந்தியாவுலதான் இருக்கோம்!.. மார்லன் பிராண்டோவையே மடக்கிய நடிகர் திலகம்!…
நடிகர் திலகம் நடிப்பில் மட்டுமல்ல. தேசப்பற்றும் கொண்டவர். தேசப்பற்று மிக்க மனிதராக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கப்பலோட்டிய தமிழன் வ.ஊ.சிதம்பரனார் வேஷத்தில் ஒரு முழுபடத்திலும் நடித்தார். வெள்ளையர்களை ஓட வைத்த வீரபாண்டிய கட்டபொம்மனாக கர்ஜித்திருந்தார்.
பல திரைப்படங்களில் தனது தேசப்பற்றை பிரதிபலிக்கும் வகையில் வசனங்களை பேசி இருக்கிறார். அதோடு, நிஜ வாழ்விலும் நாட்டுப்பற்று கொண்டவராக சிவாஜி இருந்திருக்கிறார். இரண்டாம் உலகப்போர் மூண்டபோது இந்திய ராணுவத்திற்கு உதவும் வகையில் கலைநிகழ்ச்சிகளை நடத்தி நிதி கொடுத்தார்.
இதையும் படிங்க: ஹீரோவுக்கு ஷூ லேசை அவுத்துவிடும் வேஷம்!.. அசிங்கப்பட்ட சிவாஜி!.. அட அந்த படமா?!..
அதோடு பல நூறு பவுன் நகைகளை தூக்கி கொடுத்தார். அதன் இப்போதையை மதிப்பு சில நூறு கோடிகள் என சொல்லப்படுகிறது. நாட்டுக்காக போராடிய காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு கடைசி வரை செயல்பட்டார். காங்கிரஸ் கட்சியில் இருந்ததால் திமுகவில் இருந்த எம்.ஜி.ஆரையும் கடுமையாக விமர்சித்து பேசி இருக்கிறார் சிவாஜி.
ஒருமுறை அமெரிக்கா சென்றிருந்தபோது காட்ஃபாதர் புகழ் நடிகர் மார்லன் பிராண்டோவை சந்தித்து பேசினார். அப்போது ‘இந்திய சினிமாவை நீங்கள் பார்த்தது உண்டா?’ என சிவாஜி கேட்க பிராண்டாவோ ‘சத்யஜித்ரே இயக்கிய ஒரு படம் பார்த்தேன். அந்த படத்தில் காட்டப்பட்ட வறுமை இந்தியா எப்படிப்பட்ட நாடு எனக்கு உணர்த்தியது’ என சொன்னார்.
இதையும் படிங்க: சிவாஜியின் நடிப்பு இப்படித்தான் இருக்கும்!.. இளம் நடிகர்கள் சொல்வது என்ன தெரியுமா?…
அதற்கு பதில் சொன்ன சிவாஜி ‘இப்போது என்னை நீங்கள் பார்க்கிறீர்கள்?. நானும் உங்களை போலவே கோட் சூட் அணிந்திருக்கிறேன். உங்களுக்கு எனக்கும் எதாவது வித்தியாசம் இருக்கிறதா?’ எனக்கேட்டிருக்கிறார். பிராண்டாவோ ‘இல்லை இருவரும் ஒன்றுதான்’ என சொல்லி இருக்கிறார்.
அதற்கு சிவாஜி ‘ஒரு சினிமாவை பார்த்துவிட்டு இந்தியாவே இப்படித்தான் என முடிவு செய்யாதீர்கள். இந்தியாவில் வறுமை மட்டுமில்லை. செழுமையும் இருக்கிறது. நானும் இந்தியாவில் இருந்துதான் வருகிறேன்’ என சொல்ல பிராண்டோ அசந்து போனாராம். இந்தியாவை எப்போதும் எந்த சூழ்நிலையிலும் சிவாஜி விட்டுக்கொடுத்தது இல்லை என்பது இதவே சிறந்த உதாரணம் ஆகும்.