தமிழ் சினிமாவின் ஒரு சகாப்தமாக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் .இவர் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பாகவே மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த சிவாஜி கணேசன். அந்த நாடகத்தில் அவருடைய நடிப்பை பார்த்து மெய் சிலிர்த்த தந்தை பெரியார் அவரை சிவாஜி கணேசன் என்று அழைத்தார். அதுவரை கணேசன் என்ற அவருடைய பெயர் சிவாஜிகணேசன் என்று மாறியது.
கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள சிவாஜி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்துள்ளார். அவருக்கே உண்டான சிறப்பு நல்ல குரல் தொணி ,தெளிவான உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு அவருடைய நடிப்புத் திறன் ஆகியவை தான். அவருடைய நடிப்பை சிலபேர் ஓவர் ஆக்டிங் என்று சொல்லுவதும் உண்டு .ஆனால் உண்மையிலேயே அந்தக் கால மேடை நாடகங்களில் தொழில்நுட்ப குறைபாடுகள் என்பது சாதாரணமாக நடக்கக்கூடிய ஒரு விஷயம். அதனாலேயே தன்னுடைய உணர்ச்சிகளை மிகைப்படுத்தி காட்டி நடித்ததனால்தான் வெள்ளி திரையிலும் அவர் அதையே பயன்படுத்தி வந்தார்.
இவருடைய சிம்ம குரலுக்கு உதாரணமாக அமைந்த படங்கள் மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களாகும். அதுமட்டுமில்லாமல் தேசத் தலைவர்களின் பாத்திரங்களையும் ஏற்று திறம்பட நடித்துக் கொடுத்தார் சிவாஜி. பாசமலர் வசந்த மாளிகை போன்ற திரைப்படங்கள் இவர் நடிப்புக்காக பேசப்பட்ட படங்களாகும்.
சினிமாவில் முக்கியம் வாய்ந்த நடிகராக சிவாஜி திகழ்ந்தாலும் அரசியலிலும் ஈடுபாடு கொண்டவராகவே இருந்தார் .55 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிவாஜி 61 லிருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இருந்தாலும் திராவிடத்தில் பெரும் புள்ளியாக திகழ்ந்த கருணாநிதியின் மேல் சிவாஜிக்கு எப்பொழுதும் ஒரு தனி பிரியம் உண்டு. கருணாநிதியின் வசனத்தில் ஏகப்பட்ட படங்களில் நடித்த சிவாஜி கருணாநிதியின் மேல் அளவுக்கு அதிகமான அன்பும் அக்கறையும் கொண்டே இருந்தார்.
ஒரு சமயம் சிவாஜியே” தனக்கு ஏதாவது ஒன்று நிகழ்ந்தால் முதல் ஆளாக கருணாநிதி தான் வந்து நிற்பார், அதேபோல் கருணாநிதிக்கு ஏதாவது நிகழ்ந்தால் முதல் ஆளாக நான்தான் போய் நிற்பேன்” என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு இருவருக்கும் ஒரு நல்ல நட்புறவு இருந்து வந்தது. இதற்கு மேலும் ஒரு உதாரணமான சம்பவத்தை சிவாஜியை பற்றி ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர் மருதுமோகன் கூறி இருக்கிறார்.
பொன்னியின் செல்வனில் எப்படி பொன்னியின் செல்வன் யானையின் காதில் ஏதோ ஒன்று சொல்லி தன்னுடைய ஆணையை நிறைவேற்ற நினைப்பானோ அதே போல சிவாஜிக்கும் அந்த பழக்கம் உண்டாம் . பொன்னியின் செல்வன் படத்தில் கூட கடைசியாக பொன்னியின் செல்வனாக வரும் ஜெயம் ரவி யானையின் காதில் ஒரு ஆணையை நிறைவேற்ற சொல்லி வேண்டுகோள் விடுப்பார் .அதேபோல்தான் சிவாஜியின் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறதாம்.
கருணாநிதி முதலமைச்சர் ஆன போது உடனே சிவாஜியை பார்க்க வேண்டும் என நினைத்தாராம். அவர் தஞ்சாவூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது சிவாஜி தஞ்சாவூர் அருகில் இருந்த சூரக்கோட்டை என்ற ஊரில் தனக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்தாராம் .கலைஞரின் ஆசையை போலீஸ் காவலர்கள் துணையோடு சிவாஜியின் காதுக்கு சென்று இருக்கிறது. கலைஞர் வந்து உங்களைப் பார்க்க ஆசைப்படுகிறார் என்று சொன்னதும் சிவாஜி ஒரு பெரிய ஆளு உயர மாலையை தயார் செய்து வைத்திருந்தாராம் .அது கிட்டத்தட்ட 20,000 மதிப்புள்ள மாலையாம் .அதை ஒரு பெரிய லாரியில் ஏற்றி வர சொல்லிவிட்டு கருணாநிதிக்காக காத்துக் கொண்டு இருந்தாராம்.
இதையும் படிங்க : கமல் என்னிடம் பேசவே மாட்டாரா?.. நடிகையிடம் அழுது புலம்பிய மனோபாலா..
மேலும் அந்த ஊரில் உள்ள ஒரு கோயிலுக்கு சிவாஜி ஒரு யானையை பரிசாக கொடுத்திருந்தாராம். அந்த யானையையும் வரச் சொல்லி அந்த யானையின் காதில் “கலைஞரின் கழுத்தில் இந்த மாலையை போட்டுவிட்டு திரும்பவும் அதை எடுத்து விட வேண்டும்” என்ற ஆணையை பிறப்பித்தாராம் .யானையும் அவ்வாறே செய்ததாம் .இந்த நிகழ்வை சிவாஜியை பற்றி ஆராய்ச்சி செய்த மருது மோகன் ஒரு பேட்டியின் மூலம் தெரிவித்தார்.
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…