அந்த நடிகரை பாராட்டிய நடிகர் திலகம்!.. ஏமாந்து போன கமல்!.. உயிர கொடுத்து நடிச்சும் இப்படியா?!..

by சிவா |
sivaji kamal
X

நடிகர் கமலுக்கு பிடித்தமான சில நடிகர்கள் இருக்கிறார்கள். அதில் சிவாஜி கணேசனும், நாகேஷும் முக்கியமானவர்கள். அதேபோல், நாசர் உள்ளிட்ட நடிகர்களை தனது படங்களில் தொடர்ந்து நடிக்க வைப்பார் கமல். நாகேஷும் கமலின் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், நம்மவர் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார்.

கமலுக்கு நடிகர் திலகம் சிவாஜி மீது பெரிய மரியாதையும் அன்பும் உண்டு. சிறு வயது முதலே அவரின் மடியின் விளையாடியவர் என்பதால் அவரிடம் அதிக பாசமும் அவருக்கு உண்டு. அடிக்கடி அவரை சந்தித்து பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார் கமல்ஹாசன். சிவாஜிக்கும் கமலை மிகவும் பிடிக்கும்.

இதையும் படிங்க: அரை மணி நேரத்தில் 6 பாட்டு!. 2 மணி நேரத்தில் ரெக்கார்டிங்!.. கமல் படத்தில் இளையராஜா செய்த மேஜிக்!..

‘புதிது புதிதாக எதையாவது யோசித்து செய்து கொண்டிருக்கிறான். நல்லா நடிக்கிறான்’ என கமலை பற்றி பலரிடமும் சொல்வாராம் சிவாஜி. கமலுடன் இணைந்து சிவாஜி நடித்த ஒரே திரைப்படம் தேவர் மகன். இந்த படத்தின் கதை, வசனம் மற்றும் திரைக்கதையை கமல்ஹாசனே எழுதியிருந்தார்.

Thevar Magan

Thevar Magan

இந்த படத்தில் கமலின் அப்பாவாக சிவாஜி நடித்திருந்தார். இப்படத்தின் முதற்பாதியில் சிவாஜியின் காட்சிகள் வரும். மண்ணையும், மக்களையும் மதிக்கும் பெரிய தேவராக சிவாஜி கலக்கி இருப்பார். அதேபோல், அமெரிக்கா போய் செட்டில் ஆக வேண்டும் என சொல்லிக்கொண்டிருக்கும் மகனை பிரிய முடியாமலும் வாடும் வேடத்தில் அசத்தி இருப்பார்.

இதையும் படிங்க: கமல் நடித்த வெள்ளி விழா படங்களின் லிஸ்ட்!.. வசூல் ராஜாவாக கலக்கிய உலக நாயகன்…

இந்த படத்தில் சிவாஜியின் பரம்பரை எதிரியாக நாசர் நடித்திருப்பார். தனது சித்தப்பாவாக சிவாஜி இருந்தாலும் அவரது குடும்பத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டே இருப்பார். கமல் எவ்வளவு பொறுமையாக சொல்லியும் கேட்காததால் படத்தின் இறுதியில் அவரின் தலையை வெட்டி கமல் கொலை செய்வது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

nasar

இந்த படம் முடிந்து ரிலீசுக்கு முன் சிவாஜி, கமல், நாசர் என அப்படத்தில் நடித்தவர்கள் ஒரு பிரிவ்யூ தியேட்டரில் படம் பார்த்திருக்கிறார்கள். படத்தை பார்த்துவிட்டு சிவாஜி யாரை பாராட்டப்போகிறார் என கமல் உட்பட எல்லோரும் ஆவலுடன் காத்திருந்தனர். படம் முடிந்ததும் ‘எங்கடா பாய்.. செமயா நடிச்சிருக்கான். அவன கூப்பிடு’ என கமலிடம் சொல்லி இருக்கிறார். அதன்பின் நாசர் அங்கே வர ‘பிரமாதமா நடிச்சிருக்கடா’ என அவரை பாராட்டிவிட்டு போய்விட்டாராம்.

Next Story