Connect with us
sivaji

Cinema History

டாக்டர் சொல்லியும் கேட்காம நடிச்சி ரத்த வாந்தி எடுத்த சிவாஜி!.. டெடிக்கேஷன்னா நடிகர் திலகம்தான்!..

Actor sivaji: நடிகர் திலகம் சிவாஜி எப்படிப்பட்ட நடிகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். நாடகமோ, சினிமாவோ நடிப்பு என வந்துவிட்டால் அந்த கதாபாத்திரம் என்ன செய்யுமோ அதை அப்படியே செய்வதுதான் சிவாஜியின் வழக்கம். அதாவது, அந்த கதாபாத்திரமாகவே மாறி உணர்ச்சிகளை காட்டுவது சிவாஜியின் ஸ்டைல்.

இதை ஓவர் ஆக்டிங் என சிலர் சொல்வதுண்டு. சிலர் அல்ல அவரின் காலத்திலேயே பல நடிகர்களும் கூட அப்படி சொன்னார்கள். இதுபற்றி ஒருமுறை விளக்கமளித்த சிவாஜி ‘என் படங்களை கிராமத்தில் வசிக்கும் மக்களும் பார்க்கிறார்கள். அவர்களுக்கு அந்த கதாபாத்திரம் போய் சேர வேண்டுமென்றால் அப்படித்தான் நடிக்க வேண்டும். பெரிதாக உணர்ச்சியே காட்டாமல், செட்டிலாகவும் எனக்கும் நடிக்க தெரியும். அதையும் பல படங்களில் செய்திருக்கிறேன்’ என சொன்னார்.

இதையும் படிங்க: என்கிட்ட எல்லாரும் பயப்படுவாங்க!. ஆனா சிவாஜி வேறலெவல்!. அப்போதே சொன்ன பானுமதி..

அவர் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. சிவாஜி என்றாலே நடிப்பு என ஆனபின் அவரின் நடிப்பை ரசிக்கத்தானே அவரின் ரசிகர்கள் தியேட்டருக்கு போனார்கள். அவர்களுக்கு பிடித்தது போல் சிவாஜி நடித்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அதேநேரம், ஒரு கதாபாத்திரத்தின் சரியான உணர்ச்சியை காட்டி நடித்த நடிகர்களில் சிவாஜி முக்கியமானவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.


சில சமயம் தனது உடல்நிலையை கருத்தில் கொள்ளாமலும் சிவாஜி நடிப்பார் என்பது பலருக்கும் தெரியாது. சிறு வயது முதலே நாடகங்களில் நடித்தவர் சிவாஜி. பராசக்தி படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டாலும் அதன்பின்னரும் பல நாடகங்களிலும் சிவாஜி தொடர்ந்து நடித்து வந்தார்.

இதையும் படிங்க: சிவாஜியை காப்பி அடித்து ரஜினி நடித்த படம்!.. ஆனாலும் தனது ஸ்டைலில் அசத்திய சூப்பர்ஸ்டார்!..

அதில் முக்கியமானது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ நாடகம்தான். இந்த நாடகத்தில் உணர்ச்சிமிக்க, கத்தி பேசும் வசனங்கள் நிறைய இருக்கும். ஒருமுறை அவருக்கு உடல்நிலை சரியில்லை. எனவே, மருத்துவரை அருகில் வைத்துக்கொண்டே அந்த நாடகத்தில் நடித்தார் சிவாஜி. இந்த நாடகத்தை பார்ப்பதற்காக நடிகர் ஏ.ஆர்.சீனிவாசனும் சென்றிருந்தார்.

sivaji ganesan

sivaji ganesan

நாடகம் முடிந்ததும் சிவாஜியை பாராட்டுவதற்காக அவரின் அறைக்கு போனவருக்கு பெரும் அதிர்ச்சி. ஏனெனில், வாஷ் பேசன் முழுக்க ரத்தமாக இருந்தது. அருகில் நின்று கொண்டிருந்த டாக்டர் ‘நான் எவ்வளவு சொல்லியும் நீங்கள் கேட்பதே இல்லை. உங்களுக்கு உடல்நலம் சரியில்லை. இவ்வளவு ஆக்ரோஷமாக நடிக்கக் கூடாது’ என சொல்லியிருக்கிறார்.

அதற்கு சிவாஜி ‘எனக்கு உடல் நலம் சரியில்லை என்பதற்காக நடிப்பில் என்னால் அடக்கி வாசிக்க முடியாது. நடிப்பு என வந்துவிட்டால் அதற்கு நியாயம் செய்யத்தான் வேண்டும்’ என சொன்னாரம். இந்த தகவலை ஏ.ஆர்.சீனிவாசன் ஊடகம் ஒன்றில் தெரிவித்து ‘சிவாஜியை போல ஒரு நடிகரை பார்க்கவே முடியாது’ என சொல்லியிருந்தார்.

இதையும் படிங்க: சிவாஜி இறப்பில் நடிகர் சங்கம் செய்த விஷயம்..! விஜயகாந்த் இறப்பில் ஒரு ஈ, காக்காவை காணுமே..!

google news
Continue Reading

More in Cinema History

To Top