நடிகர் திலகம் சிவாஜி நடித்து வெளிவராத திரைப்படங்கள்.. லிஸ்ட் பெருசா இருக்கே!...
நாடக நடிகராக இருந்த சிவாஜி கணேசன் ‘பராசக்தி’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே அனுபவ நடிகர் போல் அசத்தலான நடிப்பை கொடுத்து ஆச்சர்யம் கொடுத்தவர். அதன் பின் பல திரைப்படங்கள், பல பரிமாணங்கள் என விளங்கி நடிப்பு என்றால் அது நான்தான் என கூறியவர் சிவாஜி. அந்த பக்கம் அதிரடி சண்டை காட்சிகளில் நடித்து வந்த எம்.ஜி.ஆரே, சிவாஜிதான் சிறந்த நடிகர் என ஒப்புக்கொண்டார்.
ஒருபக்கம் எம்.ஜி.ஆர் சண்டை படங்களில் நடித்து வந்தால், சிவாஜி நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ரசிகர்கள் சிவாஜியை நடிகர் திலகம் என அழைத்தனர். 4 தலை முறை நடிகர்களோடு நடித்தவர் சிவாஜி. 1952 முதல் 1999 வரை ,அதாவது கருப்பு வெள்ளை முதல் கலர் சினிமா வரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஆனால், சிவாஜியை வைத்து துவங்கப்பட்ட சில திரைப்படங்கள் வெளிவராமலும் போயிருக்கிறது. சில படங்கள் பட அறிவிப்போடு நின்று விடும், சில படங்கள் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து அதன்பின் நின்று விடும்.
பாக்ய சக்கரம்,
பூம்புகார்,
புலித்தேவன்,
ஜன பூமி,
வானவில்,பட்டதாரி,
சுவிகாரம்,
நடமாடும் தெய்வம்,
ஞாயிறும் திங்களும்,
பெண்பாவம் பொல்லாது,
அன்புள்ள அத்தான்,
ஒருபிடி மண்,
ஒருநாள் ராஜா,
ஜெயித்துக் காட்டுகிறேன்,
அன்னை பூமி,
பூப்போல் மனசு,
ஆதி பகவன்,
மக்கள் அன்பன்,
அன்பு மகன்
ஆகிய படங்கள் நின்று போன படங்களாகும்.
இதையும் படிங்க: காஸிப்ஸுக்கு அஞ்சிர ஆளு நான் இல்ல!.. 19 வருடம் போராடி நீதிமன்றத்தில் ஜெயித்த நடிகை..