பிரபல 90’ஸ் நடிகையுடன் நடிக்க ஆசைப்பட்ட சிவாஜி.. அரங்கில் சத்தமாக கூறி ஆசையை வெளிப்படுத்திய நடிகர் திலகம்..
தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரம் இல்லை. நடிக்காத கதை இல்லை. எந்த கதாபாத்திரமானாலும் அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டு அந்த கதாபாத்திரமாகவே வாழும் ஒரு பல்கலைக்கழகம் தான் சிவாஜி கணேசன்.
இன்றைய தலைமுறையினருக்கு அகராதியாக திகழ்பவர். இந்த கதாபாத்திரத்திற்கு ரெஃபரன்ஸ் வேண்டுமா சிவாஜியின் இந்த படத்தை பாரு என்று சொல்லுமளவிற்கு அனைத்து ரோல்களிலும் கச்சிதமாக நடித்தவர் சிவாஜி. இதன் காரணத்தை ஒரு பேட்டியின் போது சிவாஜியே தெரிவித்திருந்தார்.
பொது இடங்களில் பார்க்கும் மனிதர்களை சர்வ சாதாரணமாக பார்த்து கடந்து போகிறவன் நான் இல்லை. அதை அப்படியே என் கதையில் பயன்படுத்திக் கொள்வேன். அதனாலேயே திரையில் கச்சிதமாக பொருந்தி விடுகிறது என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார். அப்படிப்பட்டவர் நடிகை சுகன்யாவுடன் நடிக்க ஆசைப்பட்ட சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
இதையும் படிங்க : தளபதி 67 படத்தில் சீயான் விக்ரம்?? லோகேஷ் செமத்தியா ஒரு பிளான் வச்சிருக்கார் போல…
அதுவும் சுகன்யா நடித்த செந்தமிழ்ப்பாட்டு படத்தை பார்த்து சிவாஜி ஆச்சரியப்பட்டாராம். இதை ஒரு பேட்டியில் சுகன்யாவே கூறியிருந்தார். மேலும் சிங்கப்பூரில் ஒரு விழாவில் பங்கேற்பதற்காக சிவாஜி உட்பட பலரும் போயிருக்கின்றனர். அப்போது மேடையில் பேசிய சிவாஜி கணேசன் ‘என் அருமை கண்மணியே சுகன்யா’ என்று மூன்று முறை உச்சரித்து பெருமிதம் கொண்டாராம்.
கூறியதோடு மட்டுமில்லாமல் உன்னோடு சேர்ந்து ஒரு படமாவது கண்டிப்பாக நடிப்பேன் என்றும் அந்த மேடையில் கூறியிருக்கிறார். இதை சுகன்யா கூறிய போது எல்லையில்லா மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். அவரோடு சேர்ந்து நடிக்கமுடியாமல் போனாலும் அன்று அவர் சொன்ன அந்த வார்த்தையே ஏழு ஏழு ஜென்மத்திற்கும் நிலைத்து நிற்கும். அதுவே போதும் என்று சுகன்யா கூறினார்.