சில்க் ஸ்மிதா செஞ்ச வேலையில் கடுப்பான சிவாஜி!.. இவ்வளவு நடந்திருக்கா!..

80களில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. இவர் ஆந்திராவை சேர்ந்தவர். ரசிகர்கள் இவரை சிலுக்கு என அழைப்பார்கள். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். வண்டிச்சக்கரம் திரைப்படம் மூலம் இவர் ரசிகர்களிடம் பிரபலமானார்.
கமல், ரஜினி திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பதோடு ஒரு கவர்ச்சி பாடலுக்கும் நடனமாடி ரசிகர்களை கிறங்க வைப்பார். இதனாலேயே இவருக்கு திரையுலகில் டிமாண்ட் அதிகம். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த்திருக்கிறார். அறிமுக நடிகர்கள் நடிக்கும் பல படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார்.
இதையும் படிங்க: பண்ணது தப்புதான்!.. ப்ளிஸ் யாராவது எனக்கு உதவி பண்ணுங்க!.. கூல் சுரேஷ் நிலமைய பாருங்க!..
தெலுங்கில் சிரஞ்சீவி உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடினமாடியிருக்கிறார். சிலுக்கு நடனமாடினாலே படம் ஹிட் என்கிற நிலைமையும் 80களில் இருந்தது. எனவேதான், இவரின் கால்ஷீட்டை பெற தயாரிப்பாளர்கள் போட்டி போட்ட காலம் அது. கவர்ச்சி மட்டுமல்ல பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார்.
நடிகர் கார்த்திக் அறிமுகமான அலைகள் ஓய்வதில்லை படத்தில் தியாகராஜனின் மனைவியாகவும், காதலர்களை சேர்த்து வைக்கும் கதாபாத்திரத்திலும் அழகிய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். நிஜ வாழ்வில் இவர் மிகவும் தைரியமான பெண். எதற்கும் பயப்பட மாட்டார். என்ன பிரச்சனை என்றாலும் துணிந்து நிற்பார்.
இதையும் படிங்க: ரஜினிக்கு கொடுக்கத் தெரிஞ்ச பாதுகாப்பை விஜய்க்கு ஏன் கொடுக்க முடியல? தம்பி வருவான் – தோள்கொடுத்த சீமான்
ஆனால், சொந்த வாழ்வில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் 1996ம் வருடம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் மரணம் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒருமுறை நடிகர் சிவாஜி கலந்து கொண்ட விழாவில் சிலுக்கும் கலந்து கொண்டார்.
சிவாஜி மேடைக்கு வந்ததும் எல்லோரும் எழுந்து நின்றனர். ஆனால், சிலுக்கோ எழுந்து நிற்காமல் அமர்ந்து கொண்டே இருந்தார். சிலர் அவருக்கு சைகைகளில் சொல்லியும் அவர் எழவில்லை. சிவாஜியும் இதை கவனித்தார். ஆனால், அதை எதையும் காட்டிக்கொள்ளவில்லை. அதன்பின் ‘சிலுக்கு திமிரு புடிச்சவன்னு கேள்வி பட்டுக்கேன்.. அது உண்மைதான் போல’ என சொன்னாராம்.
இந்த விஷயம் அப்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. பல பத்திரிக்கைகளும் இதை செய்தியாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மணிரத்னத்தின் ஹிட் படத்தில் நடிக்க இருந்த நதியா… ஜஸ்ட்டு மிஸ்சு..! என்ன படம் தெரியுமா?