எனக்கு சம்பளமே வேணாம்!.. விஜய் பட இயக்குனரை தட்டி தூக்கிய எஸ்.கே!.. காம்பினேஷனே அள்ளுது!..

Published on: February 26, 2024
sivakarthikeyan
---Advertisement---

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ, ரஜினி முருகன் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் சிவகார்த்திகேயன். தமிழ் திரையுலகில் குறுகிய காலகட்டத்திலேயே பெரிய ஹீரோவாக உயர்ந்தவர் இவர். சில தோல்விப்படங்களை கொடுத்தாலும் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.

இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘அமரன்’ படத்தில் இராணுவ வீரராக நடித்து வருகிறார். இந்த படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சியெல்லாம் செய்து உடம்பை ஃபிட் என மாற்றியிருக்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் வீடியோவும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

இதையும் படிங்க: இளையராஜா பயோபிக்! இயக்குனரை டிக் செய்த இசைஞானி.. ஆனா கண்டீசன் என்ன தெரியுமா?

டாக்டர் படத்தை போல இந்த படத்தில் சிவகார்த்திகேயனை பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை முடித்தபின் வெங்கட்பிரபுவின் இயக்கத்த்கில் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த பிராஜெக்ட் உருவானதற்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது. கோட் படத்திற்கு முன்பு சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ஒரு படத்தை இயக்கவிருந்தார் வெங்கட்பிரபு. இந்த படத்தில் கன்னட நடிகர் சுதீப் ஹீரோவாக நடிப்பதாக இருந்தது.

ஆனால், விஜயிடமிருந்து அழைப்பு வந்ததும் அந்த பட நிறுவனமோ என்.ஓ.சி கொடுத்து வெங்கட்பிரபுவை அனுப்பி வைத்தது. கோட் படத்திற்கு பின் சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட்பிரபு இயக்கும் படத்திலிருந்து சுதீப் வெளியேறி சிவகார்த்திகேயன் உள்ளே வந்திருக்கிறார். விஜயை வைத்து படமெடுத்த இயக்குனரிடம் இணைவது சிவகார்த்திகேயனுக்கு சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது.

இதையும் படிங்க: ஹீரோவா நடிச்சா நான் காலி!.. ஸ்கெட்ச் போட்டு வேலை செய்த திரைக்கதை மன்னன்..

இப்போதெல்லாம் பெரிய பெரிய பிராஜெக்ட்டுகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் எஸ்.கே. அதேபோல், வெங்கட்பிரபுவோடு அவர் இணையும் படமும் சிவகார்த்திகேயன் படங்களிலேயே பெரிய லெவலில் உருவாகபோகிறதாம். இதற்கான அட்வான்ஸ் தொகையெல்லாம் வாங்கிவிட்ட எஸ்.கே இப்போது சம்பளத்தை பற்றி எதுவும் பேசவில்லையாம்.

படம் துவங்கும்போது நமது மார்க்கெட் என்னவோ அதை வைத்து சம்பளத்தை வாங்கி கொள்ளலாம் என கணக்கு போடுகிறாராம். அஜித்துக்கு ஒரு மங்காத்தா.. சிம்புவுக்கு ஒரு மாநாடு.. விஜய்க்கு ஒரு கோட் போல சிவகார்த்திகேயனுக்கும் ஒரு சூப்பர் ஹிட் படத்தை வெங்கட்பிரபு கொடுப்பார் என எஸ்.கே. ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.