Cinema News
அப்படியே உனக்கு வேணும்னா வேற இடம் இருக்கு! சிவகார்த்திகேயனை கிழித்தெடுக்கும் பிரபலம்
Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் லியோ பரபரப்பு ஒரு பக்கம் இருந்தாலும் சிவகார்த்திகேயன் இமான் சம்பந்தப்பட்ட பிரச்சினையும் பூதாகரமாக கிளம்பியிருக்கிறது. இதை பற்றி சமீபத்தில் ஒரு சினிமா பத்திரிக்கையாளர் அவருடைய கோபத்தை ஆக்ரோஷமாக காட்டியிருக்கிறார். அந்த வீடியோதான் இப்போது வைரலாகிவருகின்றது.
பிறர் மனை நோக்கா என வள்ளுவரே சொல்லிட்டு போயிருக்காரு. ஆனால் சிவகார்த்திகேயன் போன்ற மிகப்பெரிய அந்தஸ்தில் இருக்கும் ஹீரோ இப்படி செய்வது மிகவும் வேதனை அளிக்கிறது. இமான் எந்தளவுக்கு வருத்தப்பட்டு அந்த விஷயத்தை சொல்லியிருக்கிறார்.
இதையும் படிங்க: நீங்க வெளியில போய் சண்டை போடுங்க.. பொடணியில் தட்டி வெளியேற்றப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்..!
இதில் சிவகார்த்திகேயன் மிகவும் நல்லவருனு இமானின் முதல் மனைவி அளித்த பேட்டிதான் அனைவருக்கும் ஒரு லட்டாக மாட்டியது. யாரு யாருக்கு சர்ட்டிஃபிக்கேட் கொடுக்கிறது? தானா வந்து வலையில் மாட்டியது போல இருக்கிறது இமான் முதல் மனைவி அளித்த பேட்டி.
ஏதோ இருக்கப் போய்தானே வந்து பேட்டி கொடுத்திருக்கிறார். ஒரு பையனை நம்பி வீடு வரைக்கும் அனுமதிக்கிறார் என்றால் அந்த மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் தாண்டி சினிமாவில் கிடைக்காததையா இன்னொரு குடும்பத்தில் வாங்கிவிட முடியும்?
இதையும் படிங்க: நடிகர்களையே பதம் பார்த்த ஒற்றை பாடல்வரி… சிக்கலிலிருந்து தப்பிக்க உதவிய வாலி…
சினிமாவில் கையை நீட்டினாலே எல்லாமே கிடைக்கும். இன்று சிவகார்த்திகேயன் இருக்கிற அந்தஸ்துக்கு அவர் நினைக்கிறதெல்லாம் கிடைக்கும். அதையும் மீறி உங்களுக்கு ரொம்ப ஆசையா இருந்துச்சுனா அந்தப் பக்கம் போங்க. இங்க எதுக்கு வர்றீங்க? என அந்த பத்திரிக்கையாளர் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்.
அதுமட்டுமில்லாமல் பல மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களுக்கும் பல மடங்கு தொகை கைமாறியிருக்கிறதாம். அதாவது சிவகார்த்திகேயன் ஐடி விங்ஸ் எல்லாம் அவர் சம்பந்தமான எந்த செய்தி மற்றும் வீடியோ எது வந்தாலும் டாப்பில் வராதவாறு பார்த்துக் கொள்ள தேவையானதை செய்துவிட்டாராம்.
இதையும் படிங்க: உடம்பு முழுக்க சாமி காயிறு கட்டி என்ன பிரயோஜனம்?.. மட்டமான வேலையை பண்ணும் யோகிபாபு?..
மேலும் அந்த மீம்ஸ் கிரியேட்டரில் ஒருவருக்கு சிவகார்த்திகேயன் ஐடிவிங்கில் இருந்து இது சம்பந்தமாக பேசி ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுப்பதாகவும் சொல்லி போனில் அழைத்திருக்கிறார்கள். அந்த ஆடியோ ஆதாரமும் என்னிடம் இருப்பதாக அந்த பத்திரிக்கையாளர் கூறினார். தேவைப்படும் போது அந்த ஆடியோவை வெளியிடவும் தயாராக இருக்கிறேன் என்றும் கூறினார்.