காசு தரணுமா?.. எனக்காடா வக்கிறீங்க செக்கு!. கச்சிதமா காய் நகர்த்திய சிவகார்த்திகேயன்

Published on: June 10, 2023
sivakarthikeyan
---Advertisement---

விஜய் டிவியில் ஆங்கராக இருந்து பல முயற்சிகள் செய்து போராடி நடிகராக மாறியவர் சிவகார்த்திகேயன். மெரினா படத்தில் அறிமுகமாகி எதிர் நீச்சல் படத்தில் கவனம் ஈர்த்து படப்படியாக முன்னேறினார். இவர் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் வெற்றி இவரை முன்னணி நடிகராக மாற்றியது.

siva
sivakarthikeyan

மிகவும் குறுகிய காலத்திலேயே இவரின் சீனியர் நடிகர்களை ஓரம் தள்ளிவிட்டு அவர்களைவிட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார். அதேநேரம் சில படங்களை சொந்தமாக தயாரித்து அது தோல்வியடைவே கடனில் சிக்கினார். அதனால் அவருக்கு கிட்டத்தட்ட ரூ.100 கோடி வரை கடன் ஏற்பட்டது.

Sivakarthikeyan
Sivakarthikeyan

எனவே, சிவகார்த்திகேயனின் ஒவ்வொரு படமும் வெளியாகும்போது கடன் கொடுத்தவர்கள் அவரை நெருக்கினர். அவரின் ஒவ்வொரு படமும் பல பஞ்சாயத்துகளுக்கு பின்னரே வெளியாகி வருகிறது. கடைசியாக ஒவ்வொரு படத்திலிருந்தும் இவ்வளவு தொகையை கொடுத்து கடனை அடைக்கிறேன் என சிவகார்த்திகேயன் சில வருடங்களுக்கு முன் வாக்குறுதி கொடுத்தார். ஆனால், அவர் சொன்னதை செய்யவில்லை.

sivakarthikeyan

எனவே, சமீபத்தில் அவரை அழைத்த தயாரிப்பாளர் சங்கம் ‘கடனை கட்டாமல் இனிமேல் உங்கள் படம் வெளியாகாது. ஒவ்வொரு படத்தின் லாபத்திலிருந்தும் ரூ.25 கோடியை கொடுத்துவிடுங்கள்’ என செக் வைத்துவிட்டது. இதனால் கடுப்பான சிவகார்த்திகேயன் ஒரு கணக்கு போட்டார். நேராக உதயநிதி ஸ்டாலினை சந்தித்து ‘எனக்கு இப்படி பிரச்சனை கொடுக்கிறார்கள். அடுத்து வெளியாகவுள்ள என்னுடைய அயலான் மற்றும் மாவீரன் என இரண்டு படங்களையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக வெளியிடுங்கள்’ என கோரிக்க வைக்க உதயநிதியும் ஏற்றுக்கொண்டாராம்.

Sivakarthikeyan
Sivakarthikeyan

மாவீரன் படத்தை லைக்கா நிறுவனமே வெளியிடுவதாக இருந்தது. ஆனால், சிவகார்த்திகேயன் கச்சிதமாக கணக்குபோட்டு காய் நகர்த்த அவரின் அடுத்த இரண்டு படங்களும் இப்போது ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கு போய்விட்டது. உதயநிதி உள்ளே வந்துவிட்டதால் தயாரிப்பாளர் சங்கமும் அமைதியாகி விட்டது.

நீங்க செம கில்லாடி சிவகார்த்திகேயன்!…