70 கோடி பட்ஜெட்டில் சிவகார்த்திகேயன் சம்பளம் இவ்வளவா? படம் தரமா வருமா? புலம்பும் திரையுலகம்
Actor Sivakarthikeyan: கோலிவுட்டில் தற்போதுள்ள நம்பிக்கை நட்சத்திரம் என்றால் அது சிவகார்த்திகேயன்தான். அதுவும் அடுத்த விஜய் இவர்தான் என்றும் கூறி வருகிறார்கள். அதற்கேற்றாற்போல குடும்பங்கள் கொண்டாடும் படமாகத்தான் சிவகார்த்திகேயன் திரைப்படம் அமைந்து வருகிறது.
சமீபகாலமாக சிவகார்த்திகேயன் விதவிதமான கதைகளை தேர்ந்தெடுத்து ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்து வருகிறார். அந்த வகையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அந்தப் படத்தில் ஒரு ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: டான்ஸ் கைவந்த கலை! அப்புறம் ஏன் பாட்டுனதும் ஓடிட்டாரு? கமல் நடிக்க மாட்டேனு சொன்ன படம் எதுனு தெரியுமா
சென்னையை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்கை அடிப்படையாக வைத்துதான் அந்தப் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. படத்தை ராஜ்கமல் ப்ரடக்ஷன்தான் தயாரிக்கிறது. படத்தின் டீஸர் வெளியாகி ரணகளமாகியிருக்கிறது.
படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்துக்கள் இருப்பதாக தமிழ் நாட்டில் அநேக இடங்களில் போராட்டங்கள் வெடித்திருக்கிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார்.
இதையும் படிங்க: போனிலேயே பாட்டு வரிகளை சொன்ன கண்ணதாசன்!.. எம்.ஜி.ஆரின் மெகா ஹிட் பாட்டு அதுதான்!..
அந்தப் படத்தின் பட்ஜெட் சிவகார்த்திகேயன் சம்பளம் குறித்து ஒரு தகவல் கசிந்துள்ளது. அதாவது அந்தப் படத்தின் பட்ஜெட் 70 கோடியாம். அதில் சிவகார்த்திகேயன் சம்பளம் மட்டும் 30 கோடியாம். முருகதாஸ் சம்பளம் 20 கோடி மற்றும் அனிருத் இசை என்பதால் அவர் சம்பளம் 7 கோடி. இப்படி சம்பளமே மொத்தம் 57 கோடி வரைக்கும் வந்த நிலையில் மீதமுள்ள 13 கோடியில் தான் படமே உருவாக இருக்கிறதாம்.
இதில் மற்ற டெக்னிசியன்களின் சம்பளமும் இருக்கிறது. இதற்கிடையில் திருப்பூர் சுப்பிரமணியன் நடிகர்களின் சம்பளத்தை குறைக்க சொல்லுங்கள். நாங்கள் டிக்கெட் விலையை குறைக்கிறோம் என்று குரல் கொடுத்து வருகிறார். இப்படியே போனால் தமிழ் சினிமாவின் நிலை எங்கே போகும் என்றே தெரியாது.
இதையும் படிங்க: அஜித்தை புறக்கணிப்போம்! பிரபலம் சொன்னத்துக்கு சரியான பதிலடி கொடுத்த சித்ரா லட்சுமணன்