சிவகார்த்திகேயனின் யுடியூப் சேனல் இத்தனை கோடியா?!...மொத்த கடனையும் அடைச்சிடுவாரே!....
விஜய் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்து பின்னர் வாய்ப்பு தேடி அலைந்து சினிமாவில் நடிக்க துவங்கி, தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியிருப்பவர் சிவகார்த்திகேயன்.
இவரின் நடிப்பில் வெளியான டாக்டர், டான் ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்று ரூ.100 கோடிகளை வசூல் செய்துள்ளது. தற்போது மாவீரன், அயலான் என சில படங்களில் நடித்து வருகிறார்.
பல ஹிட் படங்களில் நடித்தாலும் இவர் தயாரிப்பில் உருவான சீம ராஜா உள்ளிட்ட சில படங்களின் தோல்வியால் ரூ.100 கோடி வரை அவருக்கு கடன் ஏற்பட்டது. தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக அந்த கடன்களை சிவகார்த்திகேயன் கட்டி வருகிறார்.
இதையும் படிங்க: கலைஞருக்கும் கேப்டனுக்கும் இடையே மோதல்…! விரிசலுக்கு காரணமாக இருந்த விஜய் பட இயக்குனர்…
ஒருபக்கம், சில வருடங்களுக்கு முன்பு அவர் ஒரு யுடியூப் சேனலில் 2 கோடி வரை முதலீடு செய்திருந்தார். அதில், அவரின் மனைவி இயக்குனராக இருந்தார். தற்போது அந்த சேனலில் அதிகமான சப்ஸ்கிரைபர்களை கொண்டு உயர்ந்துள்ளது.
இந்நிலையில், அந்த யுடியூப் சேனலை கலைஞர் டிவி நிர்வாகம் ரூ.70 கோடி விலைக்கு சிவகார்த்திகேயனிடமிருந்து வாங்கியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. ரூ.2 கோடி முதலீடு செய்து ரூ.70 கோடிக்கு விற்றுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த பணம் அவரின் கடனை அடைக்க உதவும் என திரையுலகில் பேச துவங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: தூக்கி எறிந்த விஜய் சேதுபதி…கடுப்பான அட்லி…ஷாருக்கான் படப்பிடிப்பில் அதகளம்….