தனக்குத் தானே வெட்டிக்கிட்ட குழி! அயலான் பட ரிலீஸில் இருக்கும் சிக்கல் - இந்த முறை எஸ்கேப் ஆவாரா SK?

by Rohini |
siva
X

siva

Actor Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.சினிமா துறைக்கு வந்த குறுகிய காலத்தில் விஜய், அஜித்துக்கு இணையான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

விஜயே ஒரு மேடையில் சிவகார்த்திகேயனை ‘அவர் புடிச்சிட்டாரு, கிட்ஸ புடிச்சிட்டாருனு’ மறைமுகமாக சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை குறிப்பிட்டிருப்பார். தொடர்ந்து பல நல்ல படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் இப்போது பல படங்களை தயாரிக்கவும் செய்கிறார்.

இதையும் படிங்க: கேப்டன் விஜயகாந்தின் கடைசி படம் என்னுடைய முதல் படமாகும் என நினைக்கவில்லை.. இயக்குனரின் கவலை!

கனா என்ற மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்ததும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு கம்பெனிதான். சின்னத்திரையில் ஆங்கராக இருந்து இன்று வெள்ளித்திரையில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்த நிலையில் அயலான் என்ற சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அந்தப் படம் வரும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆக இருக்கின்றது. ஆனால் படம் கடைசி நேரத்தில் ரிலீஸ் ஆகுமா என்ற நிலையும் இருக்கிறதாம். ஏகவே சிவகார்த்திகேயன் வினியோகஸ்தரர் கவுன்சிலிடம் கடனாளியாகத்தான் இருக்கிறாராம்.

இதையும் படிங்க: எனக்கு காய்ச்சல்.. இன்னைக்கு நடிக்கமாட்டேன்!. எஸ்கேப் ஆன மன்சூர் அலிகானை மடக்கிய கேப்டன்…

ஒவ்வொரு சிவகார்த்திகேயனின் படமும் ரிலீஸாகும் போதும் மொத்த கடனில் சில கோடிகளை செலுத்திவிட்டுத்தான் பட ரிலீஸ் பிரச்சினையை சரி செய்வாராம். இதற்கிடையில் உதய நிதியிடம் உள்ள நெருக்கத்தால் சமீபகாலமாக அந்த கடனையும் கட்டவில்லையாம். ஏனெனில் எதாவது பட ரிலீஸ் பிரச்சினை என்றால் படத்தை ரெட் ஜெயண்ட் மூலமாக சிவகார்த்திகேயன் ரிலீஸ் செய்துவிடுவாராம்.

அதனால் இந்த முறை உதய நிதியை நேரடியாக வினியோகஸ்தரர்களே போய் சந்தித்துவிட்டார்களாம். சிவகார்த்திகேயன் இப்படியெல்லாம் செய்கிறார். நீங்கள்தான் ஒரு வழி சொல்ல வேண்டும் என்று முறையாடியதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஒரு வேளை படத்தை ரிலீஸ் செய்து அதன் மூலம் வரும் வசூலை வைத்து கடனை அடைக்க சொல்வாரா ? இல்லை உதய நிதி வேறு என்ன சொல்வார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: பணப்பொட்டியை தூக்கி ஓடிட்டாரு போல! வெளியான பிக்பாஸ் ப்ரோமோ வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி

இதற்கிடையில் அயலான் இசை வெளியீட்டு விழாவில் எல்லாவற்றையும் பேசிய சிவகார்த்திகேயன் வாயாலேயே கெடும் என்பதற்கேற்ப இமான் மேட்டைரை மறைமுகமாக கூறினார். அதாவது ஹேட்டர்ஸ்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று கூறியிருக்கிறார். இமான் சிவகார்த்திகேயன் பிரச்சினையை மக்கள் மறந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் அதை திரும்பவும் தூசி தட்டி எழுப்பியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

Next Story