அடுத்த பத்து வருஷம் என் வாழ்க்கையே கேள்விக் குறியா போச்சு! SK க்கு என்னாச்சு?
Actor Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் தற்போது ஒரு மாஸ் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவருடைய வளர்ச்சி ஒரு அபார வளர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. நடிகராக தயாரிப்பாளராக பாடல் ஆசிரியராக என பன்முக திறமைகள் கொண்ட ஒரு கலைஞராக இந்த கோலிவுட்டில் திகழ்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
மீடியாவில் நுழைந்து எப்படியாவது தன் குடும்பத்தை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வரவேண்டும் என்ற காரணத்தினால் சின்னத்திரையில் தொகுப்பாளராக ஆரம்பித்து இப்போது வெள்ளித் திரையே கொண்டாடும் ஒரு மகா நடிகராக உயர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். சினிமாவிற்குள் வந்த குறுகிய காலத்தில் இந்த அளவுக்கு ஒரு பெயரையும் புகழையும் எடுத்து இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவருடைய தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் தான்.
இதையும் படிங்க:அண்ணனாவது தம்பியாவது.. இந்த விஷயத்தில் உலகநாயகன் தான் கெத்து…
தற்போது சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் சிவகார்த்திகேயன் அந்த படத்தில் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். படம் அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸ் என்று சொல்லப்படுகிறது.
மேலும் அமரன் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் ராணுவ கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயனை மேடையில் தொகுப்பாளர்கள் சில கேள்விகள் கேட்டு அவரை ஆச்சரியப்படுத்தி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: அடி வாங்கிட்டு வந்து என்கிட்ட புலம்புவான் ஷங்கர்! – போட்டு உடைச்சிட்டாரே ஜென்டில்மேன் நடிகர்!
அவருக்கும் அந்த விழாவில் விருது வழங்கப்பட அந்த விருதை பெற்றுக் கொண்ட சிவகார்த்திகேயன் ஒரு பத்து வினாடிகள் மட்டும் எடுத்துக் கொள்கிறேன் என அவருடைய பேச்சை தொடர்ந்தார். இந்த சினிமாவில் வந்து மக்களை உற்சாகப்படுத்த வேண்டும், நல்ல படத்தை கொடுக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன் என கூறிய சிவகார்த்திகேயனை குறுக்கிட்டு பேசிய அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் இன்னும் ஒரு பத்து வினாடிகள் எடுத்துக் கொள்ளுங்கள்.
மக்கள் நலன் சார்ந்த சமூக நலன் சார்ந்த படங்களில் சமீப காலமாக நடித்து வரும் நீங்கள் அடுத்ததாக அரசியலுக்கும் வருவீர்களா என்ற ஒரு கேள்வியை கேட்டார். இதைக் கேட்டதும் சிவகார்த்திகேயன் முதல் பத்து வினாடி எடுத்துக் கொள்கிறேன் எனக் கூறியது தவறு என இப்போது நினைக்கிறேன். இந்தக் கேள்வியால் என்னுடைய அடுத்த 10 வருஷம் கேள்விக்குறியாகிவிட்டது என கிண்டலாக கூறிச் சென்றார் சிவகார்த்திகேயன்.
இதையும் படிங்க: பரியேறும்பெருமாள் ரிலீசுக்குப் பிறகு மாரி செல்வராஜ் செய்த தரமான சம்பவம்… அப்படி ஒரு கஷ்டகாலமாம்!