ஜெயிலரில் விட்டுப் போன உறவை தொடரும் ரஜினி! தலைவர் 171ல் அதிரடியாக களமிறங்கும் சர்ச்சை நடிகர்
Rajini 171: ரஜினியின் நடிப்பில் கடைசியாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படமாக ஜெயிலர் திரைப்படம் அமைந்தது. இந்தப் படத்தை நெல்சன் இயக்க ஆரம்பத்தில் நெல்சன் மீது நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தார்கள் ரசிகர்கள்.
ஆனால் படத்தை பார்த்த பிறகு நெல்சனை கொண்டாடதவர்கள் இல்லை. ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக த.ச.ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் நடித்து வருகிறார்.இந்தப் படம் ஏதோ ஒரு சமூக கருத்துக்களை சொல்லும் படமாகத்தான் தயாராகுகிறது.
இதையும் படிங்க: சிக்குன்னு இருக்கும் உடம்பை நச்சின்னு காட்டும் மிர்னாளினி!.. 10 நாளைக்கு இது போதும்!..
இதனை அடுத்து ரஜினி லோகேஷ் இயக்கத்தில் 171வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படம் பெரிய அளவில் வரவேண்டும் என்று ரஜினியே விரும்புவதாக தெரிகிறது. தன் கெரியரில் லோகேஷுடன் இணையும் படத்தை மிகப்பிரம்மாண்ட அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார்.
இந்தப் படத்தில் முதலில் விஜய் சேதுபதியை ரஜினிக்கு வில்லனாக நடிக்க லோகேஷ் கேட்டிருக்கிறார். ஆனால் விஜய் சேதுபதி ஏற்கனவே பேட்ட படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு வேளை இதை நினைத்துவிஜய் சேதுபதி வேண்டாம் என்று சொன்னாரோ இல்லையோ என தெரியவில்லை. வில்லனாக முடியாது என மறுத்துவிட்டாராம்.
இதையும் படிங்க: நீங்க நடத்துவீங்க லீலைகளை! ஆனால் பசங்கனு வரும் போது குத்துதா? என்ன க்ளவரா பேசுறாரு நம்ம மாஸ்டர்?
அதன் பிறகே அந்த கேரக்டருக்கு லாரன்ஸ் உள்ளே வந்திருக்கிறார். இப்போதைய தகவலின் படி ரஜினி171 படத்தில் மற்றுமொரு சூப்பர் ஹீரோ நடிப்பதாக தெரிகிறது. சிவகார்த்திகேயனை உள்ள கொண்டுவர லோகேஷ் தீவிரமாக முயற்சித்து வருகிறாராம்.
ஏற்கனவே ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் தான் நடிக்க வேண்டியது. ஆனால் சில பல காரணங்களால் அந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை. அதனால் ரஜினி 171ல் இணைகிறார் என்ற ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
இதையும் படிங்க: ஐசு செயலால் கடுப்பில் இருக்கும் அமீர்..! அமீர் மீது கோபமாகி அன்பாலோ செய்த ஐசு குடும்பம்..! என்னங்கடா..!