இது எப்ப நடந்துச்சி!.. பல வருடங்கள் கழித்து தனுஷுடன் சிவகார்த்திகேயன்!.. வைரல் போட்டோ!...

by சிவா |   ( Updated:2024-08-25 01:42:10  )
இது எப்ப நடந்துச்சி!.. பல வருடங்கள் கழித்து தனுஷுடன் சிவகார்த்திகேயன்!.. வைரல் போட்டோ!...
X

Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவர் நடிகர் தனுஷ். ஏனெனில், 3 படத்தில் தன்னுடைய நண்பராக சிவகார்த்திகேயனை நடிக்க வைத்தார். அப்போது விஜய் டிவியில் ஆங்கராக வேலை செய்து வந்தார் சிவகார்த்திகேயன். சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்தும் எதுவும் நடக்கவில்லை.

அப்போதுதான் தனது சொந்த பணத்தை போட்டு சிவகார்த்திகேயனை வைத்து எதிர் நீச்சல் படத்தை எடுத்தார் தனுஷ். இந்த படம் வெற்றி பெற்று சிவகார்த்திகேயனை கவனிக்க வைத்தது. அதன்பின் மீண்டும் அவரை வைத்து காக்கி சட்டை என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

dhanush

#image_title

இப்படத்தை இயக்கியவர் துரை செந்தில்குமார். இவர்தான் சூரியை வைத்து கருடன் எனும் ஹிட் படம் கொடுத்தவர். இப்படி சிவகார்த்திகேயனை தூக்கிவிட்டவர் தனுஷ். எதிர் நீச்சல் படத்தில் நயன்தாராவை ஒரு பாடலுக்கு ஆட வைத்து அதில் தனுஷும் ஆடியிருப்பார். அதோடு, தனக்கு நெருக்கமான அனிருத்தையும் சிவகார்த்திகேயனுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அந்த படத்தில் அனிருத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஆனால், என்ன காரணமோ ஒரு கட்டத்தில் தனுஷும் சிவகார்த்திகேயனும் பேசிக்கொள்வதில்லை. அதோடு, தனுஷுடன் கூட்டணி அமைத்து ஹிட் பாடல்களை கொடுத்து வந்த அனிருத்தையும் தன் பக்கம் இழுத்துகொண்டார் சிவகார்த்திகேயன்.

இதையும் படிங்க: விஜய் படத்துக்கு அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை… வழக்கம்போல தெறிக்கவிடுமா?

அதன்பின் பல வருடங்கள் தனுஷும், அனிருத்தும் இணையவே இல்லை. அதோடு, கொட்டுக்காளி பட விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் ‘நான் யாரையும் நான்தான் வளர்த்துவிட்டேன். நான்தான் வாழ்க்கை கொடுத்தேன் என சொல்ல மாட்டேன். ஏனெனில், என்னை அப்படித்தான் பலரும் சொல்கிறார்கள்’ என பேசினார்.

அவர் தனுஷைத்தான் சொல்கிறார் என பலரும் சொன்னார்கள். பலரும் சிவகார்த்திகேயனின் அந்த பேச்சை ரசிக்கவில்லை. சமூகவலைத்தளங்களில் பலரும் சிவகார்த்திகேயன் நன்றி இல்லாதவர் என பதிவிட்டனர். இந்நிலையில், தனுஷும், சிவகார்த்திகேயனும் அருகருகில் நிற்பது போன்ற ஒரு புதிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

dhanush

#image_title

இது எங்கு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், இருவரின் தோற்றத்தையும் பார்க்கும்போது இது சமீபத்தில் எடுக்கப்பட்டிருப்பது மட்டும் புரிகிறது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ‘கோட்’ படத்துல இருக்கிற பெரிய மைனஸ் இதுதான்! ரிலீஸுக்கு முன்னாடியே இப்படியா?

Next Story