யார் வேணா நடிக்கலாம்!.. டயலாக்கை வாந்தி எடுப்பதுதான் நடிப்பா?!.. விளாசிய சிவக்குமார்...
Sivakumar:தமிழ் சினிமாவின் மார்கண்டேயன் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகர் சிவக்குமார். 1965 ஆம் ஆண்டில் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்த சிவக்குமார் கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் நடித்து மிகப்பெரிய புகழ்பெற்றவர்.
பல விருதுகளுக்கு சொந்தக்காரரான சிவக்குமார் பல நூல்களையும் எழுதி இருக்கிறார். இவர் கதாநாயகனாக நடித்த மறுபக்கம் என்ற திரைப்படம் இந்திய அளவில் சிறந்த படத்திற்கான தங்கத்தாமரை விருதை பெற்றது. இவர் நடிகராக மட்டும் அல்லாமல் சிறந்த ஓவியரும் கூட.
இதையும் படிங்க: கங்குவாக்கு ரிலீஸ் தேதியை லாக் செய்த சூர்யா!.. அப்ப வேற படம் வராம இருக்கணும்!..
சினிமாவிற்கு பிறகு இப்போது மேடைப்பேச்சுகளில் ஆர்வம் காட்டி வருகிறார். சிவக்குமார் கம்பராமாயணத்தை பற்றி ஆராய்ச்சி செய்து ஒவ்வொரு மேடைகளிலும் கம்பராமாயணத்தை பற்றி விரிவுரை தந்து வருகிறார். ஆன்மீக சொற்பொழிவாளர்கள் கூட இராமாயணக் கதை முழுவதையும் ஒரே நாளில் சொன்னதில்லை.
ஆனால் சிவக்குமாரோ இரண்டரை மணி நேரத்தில் அந்தக் கதையை முடித்து உலக சாதனையையும் பெற்றிருக்கிறார். இந்த நிலையில் தான் சிவக்குமார் ஒரு பேட்டியில் சினிமாவில் யார் வேண்டுமானாலும் நடித்து விடலாம். ஆனால் சினிமாவிற்கு பிறகு 5 வருடமாக கம்பராமாயணத்தை பற்றி ஆராய்ச்சி செய்து அதை நான் மேடைகளில் பேசி வருகிறேன்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் கோட்ல நடிக்கக் காரணமான டயலாக்… அடுத்தடுத்த மெகா படங்கள்
இந்த மாதிரி யாராவது ஆராய்ச்சி செய்ய முடியுமா? டயலாக்கை வாந்தி எடுப்பது தானே நடிப்பு என்றும் சிவக்குமார் கூறியிருக்கிறார். அதுதான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. சினிமாவில் ஒழுக்கத்திற்கு பேர் போனவர் சிவக்குமார்.
ஒட்டுமொத்த திரையுலகமும் இவர் மீது பெரிய மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறது. அதை போல் தன் பிள்ளைகளையும் நல்ல முறையில் வளர்த்திருக்கிறார் என்றும் இவரை பெருமையாகத்தான் பேசி வருகிறார்கள்.
இதையும் படிங்க: கமல் நடிக்க ஆசைப்பட்ட கேரக்டர்! அசால்டா நடிச்சு பேர் வாங்கிய சீரியல் நடிகர்
இன்னொரு பக்கம் யோகா ,தியானம் என உடலை கட்டுக்கோப்பாக வைப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். மாணவர்களுக்காக அறக்கட்டளை நிறுவி அதன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார் சிவக்குமார்.