sivakumar (1)
Suriya:
தமிழ் சினிமாவில் 60 வருடங்களை கடந்து அனைவருக்கும் ஒரு உதாரணமாக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவக்குமார். உன்னதமான நடிகர். எந்தவொரு கெட்டப்பழக்கமும் இல்லாதவர். கந்தன் கருணை திரைப்படத்தில் முருகன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரிடமிருந்து பாராட்டை பெற்றார். அந்தப் படத்தில் உண்மையிலேயே முருகனை பார்த்ததை போல இருக்கும்.
கிட்டத்தட்ட 60 வருடங்களாக இந்த சினிமாவில் சர்வே செய்து வருகிறார் சிவக்குமார். இந்த நிலையில் ஒரு பேட்டியில் தன்னுடைய குடும்பம், மகன்கள், மனைவி, பேரக்குழந்தைகள் பற்றி பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். 84 வயதாகி இருக்கும் சிவக்குமார் தினமும் அவரது பேரக்குழந்தைகளை பள்ளியில் விடும் வேலையை பார்த்து வருகிறாராம். வேற யார் போனாலும் அவருக்கு பிடிக்காதாம்.
கிட்டத்தட்ட 2006 ஆம் ஆண்டிலிருந்து சூர்யாவின் குழந்தைகளை பள்ளியில் விடுவதில் ஆரம்பித்து இன்று கார்த்தி மகளை விடுவது வரைக்கும் அவர்தான் கொண்டு போய் விடுகிறாராம். கார்த்தியின் மகளுக்கு 10 வயது இருக்குமாம். காரில் போகும் போது சரஸ்வதி சபதம் போன்ற வரலாற்று படங்களில் இருக்கும் வசனங்களை சொல்லிக் கொடுப்பாராம் சிவக்குமார். அந்த 10 வயது சிறுதி இன்று அழகாக பெரிய வசனங்களை பேசுகிறார் என்று கார்த்தியின் மகளை பற்றி பெருமையாக பேசியிருக்கிறார் சிவக்குமார்.
மேலும் சூர்யாவும் கார்த்தியும் சினிமாவில் நடிக்கமாட்டார்கள் என்று நம்பிக்கையுடன் இருந்தாராம் சிவக்குமார். அதிலும் சூர்யா சினிமா பக்கமே எட்டிப்பார்க்கமாட்டார் என்றுதான் நினைத்திருக்கிறார். ஆனால் இன்று சூர்யா தேசிய விருது வாங்கிய நடிகராக மாறியிருக்கிறார். இன்று அவர்தான் எனக்கு தகப்பன் சாமி. நானும் என் மனைவியும் அவர்களுக்கு குட்டீஸ் மாதிரி இருக்கிறோம் என்றும் சிவக்குமார் தெரிவித்திருக்கிறார்.
ஏனெனில் என் மகன்களை வளர்க்கிற வரைக்கும் நாங்கள் சொல்வதை அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது அவர்கள் சொல்வதை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நேற்று கூட கார்த்தி என்னை திட்டுனான். ஒரு ஷூ வாங்க வேண்டும் என கிளம்பினேன். உடனே எதுக்கு நீங்க போய்க்கிட்டு என என்னை திட்டி 20 ஷூவை வரவழைத்தான்.
அதில் ஒரு ஷூவை தேர்ந்தெடுத்து போட்டுக் கொண்டேன் என சிவக்குமார் கூறினார். இதில் என் மனைவி எனக்கு இன்னொரு தாய். 84 வயதிற்கு மேலும் நான் மனைவியுடன் வாழ்கிறேன் என்றால் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவன் நான் என்று சிவக்குமார் கூறினார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…