இதை பற்றி யார்கிட்டயாவது சொன்ன....? பிரபல இயக்குனரிடம் சாதியை பற்றி பேசிய நடிகர் சிவக்குமார்...!
70 களில் ஒரு சில படங்களை இயக்கி எழுத்தாளராகவும் இருந்தவர் இயக்குனர் ஜெயபாரதி. இவர் முதன் முதலில் ’குடிசை’ என்ற தமிழ் படத்தை இயக்கினார். இந்த படத்தில் லீடு ரோலில் நடிகை கமலா காமேஷ் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இது இந்தியாவின் தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. இப்படம் வெளியாகி 43 வருடங்களை நிறைவு செய்துள்ளது. இந்த படத்தை இயக்கிய இயக்குனர் ஜெயபாரதியிடம் பேசிய போது “ இந்த படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போது நடிகர் சிவகுமார் என்னை போனில் அழைத்தார்”
எடுத்ததும் நீ ஐயர் தானே ? என்று கேட்டாராம். அதற்கு ஜெயபாரதி என்ன சார் இதை பற்றியெல்லாம் நான் பேசமாட்டேன் என்று கூறினார். சும்மா சொல்லுங்கள் என்று சிவகுமார் கூற இவரும் ஆம் என பதில் கூறியுள்ளார். சரி ஐயராகிய நீங்கள் காலையில டிஃபன் சாப்பிட மாட்டீங்கள? என்று கேட்டாராம். அதற்கு ஜெயபாரதி இல்லை சார் நேரடியாக மதிய உணவு தான் சாப்பிடுவோம் என்று கூறினாராம்.
சிவகுமார் “ சரி நாளைக்கு வீட்டில் சாப்பிட வந்திருங்கள், நேரில் பேசுவோம் என்று சொல்ல இவரும் போயிருக்கார். சாப்பிட்டதும் அறைக்கு அழைத்துக் கொண்டு போயி செக் புக்கில் 10000 ரூபாயை எழுதி கொடுத்து இதை யாரிடமும் சொல்லாதே, சொன்னால் ‘குடிசை’ படம் சிவகுமார் படம்னு சொல்லிருவார்கள்,ஆகையால் இதை உன் செலவிற்கு வைத்துக் கொள், சாப்பிடமால் அலையாதே, நன்றாக சாப்பிடு , மற்ற பணிகளை பாரு, நீ எடுத்த குடிசை படம் சூப்பரா இருக்கு அதற்கு தான் இந்த விருந்து எல்லாம் என்று கூறி அனுப்பி வைத்தாராம்.